Sinhala (Sri Lanka)English (United Kingdom)

நிகழ்ச்சி நாள்காட்டி

ஜூலை 2017
ஞா தி செ பு வி வெ
25 26 27 28 29 30 1
2 3 4 5 6 7 8
9 10 11 12 13 14 15
16 17 18 19 20 21 22
23 24 25 26 27 28 29
30 31 1 2 3 4 5
நீங்கள் இங்கே உள்ளீர்கள் : நிறுவனங்கள் சுதந்திர சதுக்கம்

சுதந்திர சதுக்கம்

நிலத்தின் பரப்பளவு ஹெக்டயர் 0.9859
சுதந்திர மண்டபத்தின் தரைத் தளத்தின் பரப்பளவு 10, 000 சதுர அடி
கட்டிடத்தை அமைக்க அடிக்கல் நாட்டுதல் 1949. 02. 04
சுதந்திர அரும்பொருட் காட்சியகத்தை அங்குரார்ப்பணம் செய்தல் 2008. 02. 03

1948ஆம் ஆண்டு இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்ததன் பின்னர் அச் சுதந்திரத்தை வென்றெடுத்ததன் பொருட்டு உள்நாட்டு வெளிநாட்டு மக்களின் கௌரவத்திற்குப் பாத்திரமாகின்ற வகையில் இலங்கையின் நீண்ட கவர்ச்சிகரமான வரலாற்றைக் குறிக்கும் ஞாபகார்த்த கட்டிடமொன்றை நிர்மாணிப்பதற்கு அப்போதிருந்த அரசாங்கம் தீர்மானித்தது. அதன் பிரகாரம் கண்டி திருமண மண்டப மாதிரிக்கு சமமான, உன்னத தோற்றமுடைய கட்டிடமொன்று திட்டமிடப்பட்டது. அதன் உள்ளே பாராளுமன்றத்தினதும் செனட் சபையினதும் உறுப்பினர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் கூடியிருக்கக்கூடிய வகையில் 224 பேருக்கு ஆசன வசதிகளை வழங்கக்கூடிய இடவசதிகளும், திறந்த வெளியில் 25000 பேருக்கு ஆசன வசதிகளும் ஒரு இலட்சம் மக்கள் கூடியிருக்கக்கூடிய இடவசதிகளுடன் இக்கட்டிடம் தேசத்தின் பெருமையைப் பறைசாற்றும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளது. ஆரம்ப காலத்தில் வருடாந்தம் சுதந்திர ஞாபகார்த்த விழாவை நடத்துதல் இதன் அடிப்படை நோக்கமாக இருந்தது. விஜயனின் வருகையிலிருந்து இற்றைவரை இலங்கை வரலாற்றில் இடம்பெற்ற சம்பவங்களைபச்; சித்தரிக்கும் சித்திரங்கள் உள்ளடக்கப்பட்ட இக்கட்டிடம் சொல்லுக்குரிய அர்த்தத்துடன் நமது பழைய கலாசாரத்தை பூரணமாகப் பிரதிபலிக்கின்றது.

இத்தகைய தேசிய சொத்தைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டியது எமது ஒரே கடமையாகும். 1983 ஏப்பிறல் மாதம் 20ஆம் திகதி கூடிய அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம் சுதந்திர மாளிகை கட்டிடம் கலாசார அமைச்சுக்கு ஒப்படைக்கபட்டது. சுதந்திர ஞாபகார்த்த கட்டிடத்தின் கௌரவம் பாதுகாக்கப்படுகின்ற விதத்தில் சுற்றுச் சூழலை மேம்படுத்துவதற்கு நகர அபிவிருத்தி அதிகாரசபையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சுதந்திர மாளிகை கட்டிடம் கலாசார அலுவல்கள் அமைச்சிடம் ஒப்படைக்கப்பட்ட நாள்முதல் இற்றைவரை சுதந்திர மாளிகையையும் அதைச்சுற்றியுள்ள நிலத்தையும் பராமரிக்கும் பணிகளும் அவற்றின் திருத்த வேலைகளும் கலாசார அலுவல்கள் திணைக்கத்தினால் மேற்கொள்ளப்படுகின்றன. முழு உலகத்தின் கௌரவத்திற்கும் அன்புக்கும் பாத்திரமாகின்ற தேசிய நினைவுச் சின்னமான சுதந்திர மாளிகையை பார்வையிடுவதற்கு உள்நாட்டு வெளி நாட்டு சுற்றுலா பயணிகள் பெருமளவில் இவ்விடத்திற்கு வருகை தருகின்றனர்.

சுதந்திர சதுக்கம் ஒதுக்கீடு

Last Updated ( Wednesday, 13 July 2016 07:19 )