Sinhala (Sri Lanka)English (United Kingdom)

நிகழ்ச்சி நாள்காட்டி

செப்டம்பர் 2017
ஞா தி செ பு வி வெ
27 28 29 30 31 1 2
3 4 5 6 7 8 9
10 11 12 13 14 15 16
17 18 19 20 21 22 23
24 25 26 27 28 29 30
நீங்கள் இங்கே உள்ளீர்கள் : நிறுவனங்கள் மகாவம்சம்

மகாவம்சம் இயற்றும் அலுவலகம்

ஏதேனும் ஒரு நாட்டில் வரலாற்று ரீதியான தகவல்களைச் சேகர்த்து வைத்தல் அந்நாட்டின் அடையாளத்தைப் பாதுகாத்து வைத்தலாகும். இப்பணி உள்ளூர் ரீதியாக மட்டுமல்ல சர்வதேச ரீதியாகவும் முக்கியத்துவம் பெறுகிறது. இதன் பிரகாரம் மகாவம்சம் இயற்றும் அலுவலகத்தின் பெறுமதியைப் புரிந்துகொண்ட கலாசார, கலை அலுவல்கள் அமைச்சர் டி.பீ. ஏக்கநாயக்க அவர்களின் ஆலோசனையின் பிரகாரம் இலங்கையின் எழுத்துமூல வரலாற்றைத் தொடர்ச்சியாக எழுதிவைப்பதற்காக மகாவம்சத்தின் 6வது பகுதியை எழுதும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதன் பிரகாரம் மேற்படி பணியை மேலும் ஒழுங்கு முறைப்படுத்துவதற்காக பத்தரமுல்ல, செத்சிறிபாயவில் 08வது மாடியில் கலாசார அலுவல்கள் திணைக்கள வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மகாவம்சம் இயற்றும் அலுவலகம் அமைச்சின் செயலாளர் விமல் ரூபசிங்க அவர்களின் தலைமையில் 2011.02.25ஆம் திகதி அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.

இம்மகாவம்ச அலுவலகத்தின் மூலம் இலங்கையில் தற்பொழுது இருக்கின்ற அமைச்சுகள், திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள், பகுதி கூட்டுத்தாபனங்கள் அமைச்சுகளின் கீழ் வராத திணைக்களங்கள், நிறுவனங்களிலிருந்து தகவல்களைப் பெறும் பணிகள் தற்பொழுது ஆரம்பிக்கப்பட்டுள்ள அதே நேரத்தில் மகாவம்சம் - பகுதி 6ல் 1978 முதல் 2010ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் இலங்கையில் இடம்பெற்ற அனைத்து நிகழ்வுகளையும் ஆவணப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இங்கு அரசியல், மதம், சமூகம், கல்வி, விவசாயம், கைத்தொழில், கலாசாரம் தொழில்நுட்பம் என்ற துறைகளை அடிப்படையாகக்கொண்டு சம்பந்தப்பட்ட கட்டுரைகள் எழுதப்படும்.

மகாவம்சம் 6 ஐ இயற்றுவதற்காக 21 பேர்களைக் கொண்ட மகாவம்சம் இயற்றும் சபையொன்று அமைக்கப்பட்டுள்ள அதே நேரத்தில் அதன் தலைவராகப் பேராசிரியர் விமல் ஜி. பலகல்லே நியமிக்கப்பட்டுள்ளார்.

மகாவம்சம் இயற்றும் சபை

தலைவர் பேராசிரியர் விமல் ஜி. பலகல்லே, இணை செயலாளர்கள் பேராசிரியர் சந்திரா விக்கிரம கமகே, பேராசிரியர் மாலனி அந்தகம.

குழு அங்கத்தினர்கள்

தொல்பொருளியல் சக்கரவர்த்தி கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் வண. எல்லாவல மேதானந்த தேரர், சிங்கள அகராதியின் பிரதம ஆசிரியர் வண. அத்துரலியே நந்ததேரர், பேராசிரியர் வண. கஹபொல சுகத்தரத்தன தேரர், வண. ரத்கெரெவ்வே விமலதம்ம தேரர், பேராசிரியர் மெண்டிஸ் ரோஹனதீர, பேராசிரியர் ஆனந்த அபேசிறிவர்தன, பேராசிரியர் கே.என்.ஓ. தர்மதாச, பேராசிரியர் ரத்ன விஜேதுங்க, பேராசிரியர் டப்ளியு.எஸ். கருணாதிலக்க, பேராசிரியர் திஸ்ஸ காரியவசம், பேராசிரியர் எஸ்.பத்மநாதன், பேராசிரியர் வோல்டர் மாரசிங்க, கலாநிதி சமன் சந்திர ரணசிங்க, ஆர்.ஜி.சுமித், எஸ்.குமார, பேராசிரியர் அனுர மனதுங்க, கலாநிதி.கே.எச்.ஜே. விஜயதாச ஆகியோர் செயலாற்றுகின்றனர்.

மகாவம்சம் - 6 இணைப்பாளராக உதவிப் பணிப்பாளர் வஜிர ரத்நாயக்க, கலாசார அபிவிருத்தி உதவியாளர் தணபத்தேகம சோபித்த தேரர், அரச முகாமைத்துவ உதவியாளர்-11 திருமதி.டி.பி.ஜி.டீ. தமயந்தி ஆகியோர் செயலாற்றுகின்றனர்.

1978 - 2010 இலங்கையில் நிகழ்ந்த விசேட நிகழ்வுகளையும் தகவல்கள், முன்மொழிவுகள், குற்றச்சாட்டுகள் என்பவற்றையும் எழுத்துமூலம் எவரும் பின்வரும் முகவரிக்கு அனுப்பமுடியும். தலைவர், மகாவம்சம் இயற்றும் அலுவலகம், கலாசார அலுவல்கள் திணைக்களம், 8ஆம் மாடி, செத்சிறிபாய, பத்தரமுல்ல.

Last Updated ( Monday, 02 May 2016 09:38 )