Sinhala (Sri Lanka)English (United Kingdom)

நிகழ்ச்சி நாள்காட்டி

பெப்ரவரி 2018
ஞா தி செ பு வி வெ
28 29 30 31 1 2 3
4 5 6 7 8 9 10
11 12 13 14 15 16 17
18 19 20 21 22 23 24
25 26 27 28 1 2 3
நீங்கள் இங்கே உள்ளீர்கள் : ஊடகம் அரச வைபவங்கள்

அரச வைபவங்கள்

தொலைக்காட்சி அரச விருது வழங்கும் வைபவம்

உள்நாட்டு விழுமியங்களைக் கொண்ட உயர் தரத்திலான தொலைக்காட்சிப் படைப்புகளை உருவாக்குவதற்குத் தொலைக்காட்சி நிகழ்ச்சி படைப்பாளிகளுக்கு உதவுவதை நோக்கமாகக் கொண்டு கலாசார கலை அலுவல்கள் அமைச்சின் நெறிப்படுத்தலில் கலாசார அலுவல்கள் திணைக்களம் தொலைக்காட்சி அரச விருது வழங்கும் விழாவை ஒழுங்குசெய்கின்றது.

இவ்விருது வழங்கும் விழா 2004ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதோடு அவ்வாண்டிலிருந்து இற்றைவரை தொடர்ச்சியாக ஒழுங்குசெய்யப்படுகின்ற அதே நேரத்தில் இலங்கையில் தொலைக்காட்சி நிகழ்ச்சி படைப்பாளிகள் அரசாங்கத்தால் கௌரவிக்கப்படுகின்ற ஒரே தொலைக்காட்சி விருது வழங்கும் விழா இதுவாகும்.

ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 31ஆம் திகதிக்கு முன்னர் ஒளிபரப்பாகி முடிவடைந்த தொலைக்காட்சிப் படைப்புகளை அதற்கடுத்துவரும் ஆண்டில் விருது வழங்கும் விழாவுக்காகச் சமர்ப்பிக்க முடியும். தொலைக்காட்சி விருது வழங்கும் விழாவில் ஒளிபரப்பப்படாத பயிலுநர் தொலைக்காட்சி குறுந்திரைப்படங்களுக்கும் விருது வழங்கப்படும்.

அனைத்துத் தொலைக்காட்சிப் படைப்புகளும் அப்படைப்புகளை ஒளிபரப்பிய தொலைக்காட்சி நிறுவனத்தின் சட்டபூர்வ உரிமையாளர்களின் சான்றிதழ்களுடன் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

தொலைக்காட்சித் தொடர் நாடகங்கள், விவரண நிகழ்ச்சிகள், தொலைக்காட்சி ஓரங்க நாடகம், சஞ்சிகை நிகழ்ச்சி, செய்தி வாசித்தல், செய்தி அறிவிப்பாளர், இசை நிகழ்ச்சிகள், தொலைக்காட்சி ஒளிபரப்பாளர், தொலைக்காட்சி ஒளிப்பதிவு, ஒளிபரப்புக்கு முந்திய நாடாக்கள், பாடல் காட்சிகளை உருவாக்கல், பின்னணிப் படைப்பு, ஒளிப்பதி (பல்கெமரா தயாரிப்பு) தொலைக்காட்சி புது உற்பத்தி நிகழ்ச்சிகள், தொலைக்காட்சி கிராபிக் / நேரடி நிகழ்ச்சிகள் தொலைக்காட்சிக் கலந்துரையாடல் நிகழ்ச்சிகள் போன்ற பிரிவுகளின் கீழ் மதிப்பீடு செய்யப்படும்.

தொலைக்காட்சிப் படைப்புகள் அரச மதிப்பீட்டுக்குட்படுத்தப்படுகின்றபோது, உள்ளூர் கலாசாரம், நற்பதங்கள், நாகரிகம், மதச்சார்புடைமை, ஏற்றுக் கொள்ளப்பட்ட நன்னெறி, ஒழுக்கநெறிக் கோவை, கலாசார விழுமியங்கள், இயற்கை எழில், பாரம்பரிய நடனம், நாட்டுப்பாடல், இசை, உள்ளூர் வாத்திய இசை, புராதன வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பரம்பரைக் கதைகள், சூழல் எழில் மற்றும் அதற்கு இணையாக சமூக அறிவியல் முன்மாதிரிகள் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படும்.

தொலைக்காட்சிப் படைப்புகள் அந்தத் துறைகளில் தலைசிறந்த சுயாதீன புலமைசாலிகளைக் கொண்ட சபையினால் தேர்ந்தெடுக்கப்படும்.

விருது வழங்கும் விழாவுக்கு சமர்ப்பிக்க எதிர்பார்க்கின்ற தொலைக்காட்சிப் படைப்புகள் பதியப்பட்ட V.H.S. நாடாக்கள், D.V.D. நாடாக்கள் மூலம் ஒப்படைக்க வேண்டும்.

Rupavahini State Awards 2016 Result

Latest Result 2014

மேலே

கலாபூஷண விருது வழங்கும் வைபவம்

கலாசார ரீதியில் பார்க்கின்றபோது ஒரு நாட்டின் உயிர் நாடியாக இருக்கின்ற கலைஞர்கள் தமது, காலம், செல்வம், உழைப்பு என்பவற்றை அர்ப்பணித்து பல்வேறு கலாசார அம்சங்களைப் பாதுகாப்பதில் முன்னோடியாக செயற்பட்டாலும் ஒழுங்கான முறையில் அவர்கள் மதிப்பீட்டுக்கு உட்படுத்தப்படாததன் காரணமாக 1984ஆம் ஆண்டில் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் கலாசார அலுவல்கள் பணிப்பாளர் ஆகியோர் இவர்களை கௌரவிப்பதற்கு கலாபூஷண அஞ்சலி விழாவை ஆரம்பித்தனர். அதிலிருந்து ஒவ்வொரு வருடமும் அவர்களின் உன்னத சேவைகளைப் பாராட்டிக் கௌரவிக்கப்படுகின்ற கலைஞர்களின் எண்ணிக்கை வருடாவருடம் அதிகரித்தது.  பல்வேறு துறைகளில் (இசை, நடனம், நாடகம், இலக்கியம், ஓவிய சிற்பம், எழுத்துக்கலை, பல்வேறு விடயங்கள் போன்ற வகையில்) ஈடுபட்ட கலைஞர்கள் (சிங்கள, தமிழ், முஸ்லிம்) இன, மத வேற்றுமையின்றி கௌரவிக்கப்பட்டனர். முஸ்லிம் கலாசார் திணைக்களமும் இந்து கலாசாரத் திணைக்களமும் இதன்போது கலாசாரத் திணைக்களத்துடன் சேர்ந்து செயற்படும்.

இக்கலைஞர்களின் விலைமதிப்பற்ற சேவைகளை மதிக்குமுகமாக ஒருவருக்கு 10,000/- ரூபா பெறுமதியான நிலையான பணவைப்பும், வெள்ளிப்பதக்கமும் கலாபூஷண சான்றிதழும், அவர்களைப் பற்றி எழுதப்பட்ட சிறு நூலும் விருது பெறுகின்ற ஒவ்வொருவருக்கும் வழங்கப்படும்.

2006ஆம் ஆண்டில் 69 சிங்களக் கலைஞர்கள், 2007ல் 70 கலைஞர்கள், 2008ல் 88 கலைஞர்கள் விருதுகளைப் பெற்றதோடு 25 ஆண்டுகள் பூர்த்தியாகின்ற 2009ஆம் ஆண்டில் 200 கலைஞர்கள் விருதுபெற்றனர்.

நாட்டின் முப்பகுதிகளிலும் கலாசார சொத்துகளைப் பாதுகாப்பதற்காகத் தம்மை அர்ப்பணித்துக்கொண்ட இச் சிங்கள, தமிழ், முஸ்லிம் கலைஞர்கள் அனைவரையும் ஒரே கூரையின் கீழ் அழைக்கின்ற நேரத்தில் இவர்களுக்குப் பூரண பாதுகாப்பை வழங்குவதற்கும், மருத்துவ சிகிச்சை நிலையமொன்றை நடத்துவதற்கும் உணவளித்து உபசரிப்பதற்கும் வாய்ப்புக் கிடைத்ததைப் பெருமையாகக் கருதுகிறோம். இதற்கு என்றும் ஒத்துழைப்பு நல்குகின்ற தேசிய வைத்தியசாலை பணியாட்டொகுதியினருக்கும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் எமது நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

கலாபூஷண விருதுக்கு விண்ணப்பிப்பதற்கு சம்பந்தப்பட்ட வருடத்தில் டிசம்பர் 15ஆம் திகதிக்கு 60 வயதைப் பூர்த்தி செய்த கலைஞராக இருக்க வேண்டியது அடிப்படைத் தகைமையாகும். அத்துடன் ஒவ்வொரு வருடமும் முதல் மூன்று மாதங்களில் இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்கள் மூலம் விண்ணப்பங்கள் கோரப்படுவது பற்றிய அறிவித்தல் வெளியிடப்படும். அதற்கு மேலதிகமாக மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர் அலுவலகங்களின் கலாசாரப் பிரிவுகள் மூலம் கலைஞர்களுக்கு அறிவூட்டப்படும். விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட விண்ணப்பத்தைப் பூர்த்திசெய்து கலைத்திறன்கள் தொடர்பாகப் பெற்றுள்ள விருதுகள், சான்றிதழ்கள் பற்றிய விபரங்களுடன் அடையாள அட்டை, பிறப்புச் சான்றிதழ் ஆகியவற்றின் பிரதிகளில் பிரதேச செயலாளரின் சான்றுரையுடனும் பரிந்துரையுடனும் கலாசார அலுவல்கள் திணைக்களத்தில் ஒப்படைக்க வேண்டும். இன்றேல் பிரதேச செயலாளர் அலுவலகத்திலும் ஒப்படைக்க முடியும்.

கலாபூஷண விருதுக்கு விண்ணப்பிக்கக்கூடிய துறைகளாவன, நாடகம், எழுத்து, ஓவியம், சிற்பம், செலுக்குவேலை, அரக்கு வடிவமைப்பு, நூலாட்டம், நடிப்பு, நடனம், இசை, கவிதை, பாடகர், பாடகி, திரைப்படம், தொலைக்காட்சி நாடகம், பைலா கலைஞர், வர்மக்கலை, கண்கட்டிவித்தை, மேளவாத்தியக் கலைஞர், வெகுசனத் தொடர்பு, ஏனைய நாட்டார் கலைஞர்கள், பாரம்பரிய அல்லது தொழில் ரீதியாக அத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேலாக ஈடுபட்டிருக்கும் கலைஞர்கள்.

இத்தகைய உன்னத கலைஞர்களை நினைவு கூர்வதற்காகவும் கௌரவிப்பதற்காகவும் இலங்கை அரசு ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 15ஆம் திகதியைக் கலைஞர்கள் தினமாகப் பிரகடனப்படுத்தியுள்ளது. அன்றையதினம் இவ்வுன்னத மனிதன் கலாபூஷண விருது வழங்கிக் கௌரவிக்கப்படுவான்.

மேலே

தேசிய நாடக விழா

சிங்கள நாடகக் கலையின் வளர்ச்சிக்குக் காரணமாக அமைந்த தரமான ஆக்கபூர்வமான நாடகங்களைத் தெரிவுசெய்து அப்படைப்புகளையும் படைப்பாளிகளையும் தேசிய ரீதியில் கௌரவிப்பதற்காக அரச நாடகவிழா ஒழுங்குசெய்யப்படுகின்றது.

ஒவ்வொரு வருடமும் சனவரி முதல் மார்ச் வரை விண்ணப்பங்கள் கோரப்படும். விண்ணப்பங்கள் பற்றி பத்திரிகை மூலம் அறிவிக்கப்படும். அவ்வறிவித்தல்களின் பிரகாரம் விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து நாடகப் பிரதிகளுடன் சமர்ப்பிக்க வேண்டும். தேசிய நாடக விழா சிங்கள, தமிழ் மொழி மூலம் நடத்தப்படும்.

சம்பந்தப்பட்ட வருடத்திற்கு முதல் வருடம் சனவரி 01ஆம் திகதி முதல் டிசம்பர் 31ஆம் திகதி வரை தயாரிக்கப்பட்டு மேடையேற்றப்பட்ட, இயற்றப்பட்ட, மொழிபெயர்க்கப்பட்ட, தழுவி எழுதப்பட்ட நாடகங்களை மாத்திரம் தேசிய நாடக விழாவுக்குச் சமர்ப்பிக்க முடியும். விருது வழங்கும் விழா வருட இறுதியில் நடைபெறும்.

2015 State Drama Festival - Result

2014 State Drama Festival - Result

 

மேலே

அரச குறுநாடக விழா

சிங்கள நாடகக் கலையின் வளர்ச்சிக்குக் காரணமாய் அமைந்த தரமான ஆக்கபூர்வமானதும் ஆய்வு ரீதியான மற்றும் மாற்று விதிமுறைகளைப் பயன்படுத்துவதற்கு வாய்ப்பை ஏற்படுத்துவதன் மூலம் நாடகத் துறையில் ஈடுபடுகின்றவர்களை ஊக்குவிப்பதையும் அவர்களின் பல்வேறு திறன்களை மதிப்பீடு செய்வதையும் நோக்கமாகக் கொண்டு வருடாந்தம் சிங்கள மொழிமூல குறுநாடக விழா ஒழுங்குசெய்யப்படுகிறது. அரச குறுநாடகம் தொடர்பான விபரங்கள் ஒவ்வொரு வருடமும் பத்திரிகைகள், வெகுசன ஊடகங்கள் என்பவற்றின் மூலம் வெளியிடப்படும். இலங்கையில் எந்தவொரு பிரசைக்கும் இதற்காக விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பதாரி கட்டாயமாக நாடகத்தின் இயக்குநராக இருக்கவேண்டும்.

2014 State Drama Festival - Result

மேலே

அரச சிறுவர் நாடக விழா

கலாசார அலுவல்கள் திணைக்களம், இலங்கை கலைப்பேரவையின் தேசிய நாடகத் துணைப் பேரவை என்பவற்றுடன் இணைந்து ஒவ்வொரு வருடமும் அரச சிறுவர் நாடக விழாவை நடத்த ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளது. இவ்வாண்டு முதல் சிங்கள, தமிழ், ஆங்கில மொழிமூலம் சிறுவர் நாடக விழா நடைபெறும்.

இந்நாடக விழாவை வரையறுக்கப்பட்ட மற்றும் திறந்த நாடக விழா என இரு பிரிவுகளாக சிங்கள, தமிழ், ஆங்கில மொழி மூலங்களால் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வரையறுக்கப்பட்ட பிரிவில் பாடசாலைகள் சேர்கின்ற அதே நேரத்தில் திறந்த பிரிவில் எவரும் கலந்துகொள்ளமுடியும்.

திருத்தப்பட்ட நவீன கல்வி மற்றும் கலாசாரக் கொள்கைகளின் பிரகாரம், சிறுவர் மற்றும் புதிய இளம் பராயத்தினரின் கல்விக் களைப்பை நீக்கி, நாடகங்கள் மூலம் அர்த்தமுள்ள சிறந்த எதிர்கால பிரசைகளை உருவாக்கும் எதிர்பார்ப்புடன் இவ்விழா ஒழுங்கு செய்யப்படுகின்றது.

இன்று நாடகம் என்பது கல்வி முறையில் முக்கியமான கற்கை அம்சமாகவுள்ளது. ஆகவே இற்றைவரை தயாரிக்கப்பட்ட பாடசாலை நாடகங்களுக்குப் பதிலாக சிறுவர் நாடகங்களை அறிமுகப்படுத்துவது யுகத்தின் கல்வித் தேவையாகவும் சமூக தேவையாகவும் அடையாளம் காணப்பட்டுள்ளது.

  • இதன் மூலம் சிறுவர் மற்றும் இளம் பராயத்தினர் மத்தியில் சமாதானமான சகசீவனம், கூட்டுசெயற்பாடு, தம்மைச் சுற்றியுள்ள உலகத்தைப் பற்றிய முதிர்ச்சியுள்ள புரிந்துணர்வு என்பவற்றைப் பெற்றுக்கொள்வதற்கான வாயிலைத் திறந்துவிடுதல்.
  • எதிர்கால சந்ததியினர் என்ற வகையில் தாம் சமூகத்திற்கு ஆற்றவேண்டிய கடமைகளையும் சமூகப்பொறுப்புகளையும் பற்றியும் மன அடக்கத்துடன் பயனுள்ள பிரசைகளாக மன அடக்கத்துடன் பயனுள்ள பிரசைகளாக நடந்துகொள்வதற்கும் பயிற்சியளித்தல்.
  • சிறுவர்களிடமும் இளம் பராயத்தினரிடமும் மேடைக் கூச்சத்தை நீக்கித் துணிச்சலுடன் தோற்றும் சக்தியையும் தனிப்பட்ட திறனையும், படைப்பாற்றலையும், எதிர்காலத் தலைமைத்துவத்திற்குத் தேவையான ஆற்றலையும் வளர்த்தல், மெருகூட்டல் இயல்பான திறமைகளை மேற்கொணர்தல்.
  • சமூக முரண்பாடுகள் அற்ற, ஒற்றுமை என்ற சிந்தனையுடன் உன்னதமான எதிர்கால நோக்கங்களை இறுதிவரை வெற்றிகரமாக முன்னெடுக்கக்கூடிய மனவுறுதியுடனான முன்மாதிரியான பிரசைகளை உருவாக்குதல் என்பவை இதன்மூலம் எதிர்பார்க்கப்படுகிறது.

2016 State Children's Drama Result

2013 State Children's Drama Result

மேலே

அரச இலக்கிய விருது வழங்கும் வைபவம்

இலக்கிய கலையைப் போசித்து உயர் படைப்புகளைக் கௌரவித்து நாட்டுக்கு அளிக்கின்ற இலக்கியவாதிகளை ஊக்குவிக்கும் பொருட்டு கலாசார அலுவல்கள் திணைக்களம் வருடாந்தம் இலக்கிய விருது வழங்கும் வைபவத்தை ஒழுங்கு செய்கின்றது. அரச விருது வழங்குவதற்காகப் பின்வரும் போட்டிகளுக்குரிய நூல்களைத் தெரிவு செய்கின்றது.

சுயபடைப்பு நாவல், சுயபடைப்பு சிறுகதை, சுயபடைப்பு செய்யுள் கோப்பு, சுயபடைப்பு இளைஞர் இலக்கியம் சுயபடைப்பு நாடகம், பாடல்வரிகள், சிறுவர் இலக்கியம், விஞ்ஞானக் கட்டுரைகள், பல்வேறு விடயங்கள், நாவல் மொழிபெயர்ப்பு, சிறுகதை மொழிபெயர்ப்பு, நாடகங்கள் மொழிபெயர்ப்பு பல்வேறு மொழிபெயர்ப்புகள்.

இலக்கிய விருது வழங்கும் வைபவம் நடைபெறுகின்ற வருடத்திற்கு முந்திய வருடத்தில் சனவரி 01ஆம் திகதி முதல் டிசம்பர் 31ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் தேசிய சுவடிகள் காப்பகத் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட புத்தகமாக இருக்க வேண்டும். (அரச இலக்கிய விருது வழங்கப்படுவது சம்பந்தப்பட்ட வருடத்திற்கு முந்திய வருடத்தின் சனவரி 01 முதல் டிசம்பர் 31 வரை பதிவுசெய்யப்பட்ட புத்தகங்களுக்காகும்.)

  • சம்பந்தப்பட்ட நூலின் முதல் அச்சீடாக இருத்தல்.
  • சிறுவர் நூலாக இருந்தால் 16 பக்கங்களுக்கு மேல் இருத்தல்.
  • ஏனைய நூல்கள் 49 பக்கங்களுக்கு மேல் இருத்தல்.

தேசிய சுவடிகள் காப்பகத் திணைக்களத்தில் வைக்கப்பட்டுள்ள பிரித்தானிய பிரதிகளிடையே மேற்குறிப்பிட்ட போட்டிகளுக்குரிய நூல்களை ஒன்று சேர்த்து தேசிய இலக்கியத் துணைப்பேரவையினால் அரச விருதுபெறுவதற்காக ஆய்வுக்குத் தகுந்தவையெனத் தீர்மானிக்கின்ற நூல்களை மாத்திரம் ஆய்வுக்கு சமர்ப்பிக்கிறது. முதற்சுற்று ஆய்வை வெளி சபையொன்றும், இரண்டாவது சுற்று ஆய்வை இலாக்கிய துணைப் பேரவையும் மூன்றாவது சுற்று ஆய்வை உயரிய கல்விமான்கள் சபையும் மேற்கொள்ளும். மூன்றாவது சுற்று ஆய்வில் தகைமை பெறுகின்ற இலக்கியப் படைப்புகளுக்கு அரச இலக்கிய விருது வழங்குவதற்காக அரச இலக்கிய விருது வழங்கும் வைபவம் ஒழுங்குசெய்யப்படும்.

2013 State Literary Result Sheet

0112 872030 என்ற தொலைபேசி இலக்கத்தின் மூலம் தேசிய இலக்கிய துணைப்பேரவையின் செயலாளரை அழைத்து மேலதிக விபரங்களைப் பெற்றுக்கொள்ளமுடியும்.

மேலே

Last Updated ( Sunday, 05 February 2017 08:56 )