Sinhala (Sri Lanka)English (United Kingdom)

 

நிகழ்ச்சி நாள்காட்டி

மே 2017
ஞா தி செ பு வி வெ
30 1 2 3 4 5 6
7 8 9 10 11 12 13
14 15 16 17 18 19 20
21 22 23 24 25 26 27
28 29 30 31 1 2 3
நீங்கள் இங்கே உள்ளீர்கள் : வினா விடை

வினா விடை

  • சம்பந்தப்பட்ட வருடத்தின் டிசம்பர் 15ஆம் திகதிக்கு 60 வயதைப் பூர்த்தி செய்துள்ள கலைஞராக இருப்பது அடிப்படைத் தகைமையாகும்.
  • ஒவ்வொரு ஆண்டும் முதல் மூன்று மாதங்களுக்குள் இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்கள் மூலம் விண்ணப்பம் கோரல் தொடர்பாகப் பொதுமக்களுக்கு அறிவிக்கப்படும். அதற்கு மேலதிகமாக மாவட்ட, பிரதேச செயலகங்களில் உள்ள கலாசார பிரிவுகள் மூலம் கலைஞர்களுக்கு அறிவூட்டப்படும்.
  • குறித்த விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து கலைத்திறன்கள் தொடர்பாகப் பெற்றுக்கொண்டுள்ள விருதுகள், சான்றிதழ்களுடன் அடையாள அட்டை, பிறப்புச் சான்றிதழ் என்பவற்றின் பிரதிகளில் பிரதேச செயலாளரின் சான்றுரையுடனும் பரிந்துரையுடனும் கலாசார அலுவல்கள் திணைக்களத்தில் ஒப்படைக்க வேண்டும். இன்றேல், பிரதேச செயலாளர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.
  • கலாபூஷண விருதுக்கு விண்ணப்பிக்கக்கூடிய துறைகளான நாடகம், எழுத்து, ஓவியம், சிற்பம், செதுக்குவேலை, அரக்கு வடிவமைப்பு, நூலாட்டம், நடிப்பு, நடனம், இசை, கவிதை, பாடகர், பாடகி, திரைப்படம், தொலைக்காட்சி நாடகம், பைலா கலைஞர், வர்மக்கலை, கண்கட்டி வித்தை, மேளவாத்தியக் கலைஞர், வெகுசனத்தொடர்பு, ஏனைய நாட்டார் கலைஞர்கள், பாரம்பரிய அல்லது தொழில் ரீதியாக அத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேலாக ஈடுபட்டிருக்கும்

  • எழுத்தாளர்களுக்கு உதவுவதற்காக அவர்களுடைய நூல்களைக் கொள்வனவு செய்யும் வேலைத்திட்டம்.
  • இந்நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் நன்கொடை பெற விரும்பும் எழுத்தாளர்கள் அதற்கான விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து குறித்த ஆக்கத்துடன் ஒப்படைக்க வேண்டும்.
  • வருடம் முழுவதும் இது செயற்படுகிற நிகழ்ச்சித்திட்டமாகும்.
  • நியமிக்கப்பட்டுள்ள நூல் ஆய்வு சபை நூல்களைக் கொள்வனவு செய்வதையும், நூல்களின் எண்ணிக்கையையும் தீர்மானிக்கும்.
  • முதல் பதிப்பின் நூல்களை மாத்திரம் கொள்வனவு செய்கின்ற அதேநேரத்தில் அபூர்வமான அல்லது விசேடமான நூல்களின் இரண்டாவது பதிப்பைக் கொள்வனவு செய்வது பற்றிக் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படும்.

  • கலைத்துறையில் ஈடுபட்டிருந்து, நிரந்தர வருமானம் அல்லது ஓய்வூதியம் பெறாத 60 வயதைக் கடந்த கலைஞர்கள் இந்நன்கொடையைப் பெற்றுக்கொள்ள முடியும்.
  • அதற்காகத் தாம் உரித்தாக இருக்கின்ற பிரதேச செயலாளர் அலுவலகத்தின் மூலம் விண்ணப்பப் படிவங்களைப் பெற்றுக்கொள்ள வேண்டும். அத்துடன் பிரதேச செயலாளரின் பரிந்துரையுடன் கலாசார அலுவல்கள் திணைக்களத்திற்கு அனுப்புவதன் மூலம் இந்நன்கொடையைப் பெற்றுக்கொள்ள முடியும்.
  • இது வருடம் முழுவதும் செயற்படும் வேலைத் திட்டமாகும்.

  • அரச நடன விழாவுக்கு விண்ணப்பங்கள் கோருவது தொடர்பாகப் பத்திரிகை அறிவித்தல் மூலம் அறிவிக்கப்படுகின்ற அதே நேரத்தில் அவ்வறிவித்தல்களின் பிரகாரம் விண்ணப்பப் படிவங்களையும் சுற்றுநிருபங்களையும் பெற்று விண்ணப்பிக்க முடியும்.
  • போட்டி மூன்று சுற்றாக நடைபெறும். 1. மாவட்டம் 2. மாகாணம் 3. தேசிய
  • விருது வழங்கும் வைபவம் வருட இறுதியில் நடைபெறும்.
  • இதற்காகப் பதிவு செய்யப்பட்ட கலைநிலையங்கள் கலாசார நிலையங்கள், பாடசாலைகள் மற்றும் ஏனைய கலைச் சங்கங்கள் இதில் தோற்ற முடியும்.

  • சனவரி முதல் மார்ச் வரை விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படும். விண்ணப்பங்கள் கோருவது தொடர்பாகப் பத்திரிகை அறிவித்தல்கள் மூலம் அறிவிக்கப்படும். அவ்வறிவித்தல்களின் பிரகாரம் விண்ணப்பங்களை நிரப்பி நாடகப் பிரிதி ஒன்று மற்றும் சுருக்கப் பிரதிகள் மூன்றுடன் சமர்ப்பிக்க வேண்டும்.
  • அரச சிறுவர் நாடக விழா சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் இவ்வாண்டு முதல் நடைபெறும்.
  • போட்டி 3 சுற்றுகளாக நடைபெறும்.
  • போட்டியில் வரையறுக்கப்பட்ட, திறந்த பிரிவுகள் போட்டியிடமுடியும். வரையறுக்கப்பட்ட பிரிவில் பாடசாலைகள் சேர்த்துக்கொள்ளப்படும். திறந்த பிரிவில் எவரும் போட்டியிட முடியும்.
  • விருது வழங்கும் வைபவம் வருட இறுதியில் நடைபெறும்.

இதன் முக்கிய கடமை சிங்கள, தமிழ், ஆங்கில மொழிகளிலேயே இந்நாட்டு இலக்கியத் துறையின் வளர்ச்சிக்காக செயலாற்றுவதாகும். அந்த நோக்கத்தின் கீழ் வருடாந்தம் பல நிகழ்ச்சிகள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.

  • அரச இலக்கிய விருது வழங்கும் விழாவை நடத்துதல்.
  • நாட்டின் பல பாகங்களிலும் இலக்கிய சொற்பொழிவுகளை நடத்துவதன் மூலம் இலக்கிய இரசனையை பாடசாலைப் பிள்ளைகளுக்கும் பொதுமக்களுக்கும் பெற்றுக்கொடுத்தல்.
  • இலக்கிய செயலமர்வுகள் மூலம் சிறுகதைகள், நாவல்கள், பாடல்கள், செய்யுள் தொடர்பாக மக்களின் இரசனையை வளர்த்தல்.
  • இலக்கிய சஞ்சிகையைப் பதிப்பித்து அரச்சிடல்.

  • விண்ணப்பங்கள் ஒவ்வொரு வருடமும் சனவரி முதல் மார்ச் வரை கோரப்படும். விண்ணப்பங்கள் கோரப்படுவது தொடர்பாகப் பத்திரிகைகள் மூலம் அறிவிக்கப்படும். அவ்வறிவித்தல் பிரகாரம் விண்ணப்பங்களை நிரப்பி நாடகப் பிரதியுடனும் கேட்கப்படுகின்ற ஏனைய ஆவணங்களுடனும் சமர்ப்பிக்க வேண்டும்.
  • தேசிய நாடக விழா சிங்கள, தமிழ், மொழிமூலம் நடத்தப்படும்.
  • தேசிய நாடக விழாவுக்குக் குறித்த வருடத்தின் முந்திய வருடத்தில் சனவரி 01 முதல் டிசம்பர் 31ஆம் திகதி வரை தயாரித்து மேடையேற்றப்பட்ட சுய ஆக்க நாடகங்கள், மொழிபெயர்ப்பு நாடகங்கள், தழுவல் நாடகங்கள் மாத்திரம் சமர்ப்பிக்கப்படுதல் வேண்டும்.
  • விருது வழங்கும் விழா வருட இறுதியில் நடைபெறும்.

  • விண்ணப்பங்கள் ஒவ்வொரு வருடமும் சனவரி முதல் மார்ச் வரை கோரப்படும். விண்ணப்பங்கள் கோரப்படுவது தொடர்பாகப் பத்திரிகைகள் மூலம் அறிவிக்கப்படும். அவ்வறிவித்தல் பிரகாரம் விண்ணப்பங்களை நிரப்பி நாடகப் பிரதியுடன் சமர்ப்பிக்க முடியும்.
  • அரச குறுநாடக விழா சிங்கள, தமிழ்மொழி மூலங்களில் இவ் வருடத்திலிருந்து நடைபெறும்.
  • ஒரு நாடகப் பிரதியுடனும் மூன்று சுருக்கப் பிரதிகளுடனும் விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டும்.
  • போட்டியில் எவரும் கலந்துகொள்ள முடியும்.
  • விருது வழங்கும் விழா வருட இறுதியில் நடைபெறும்.

  • ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 31ஆம் திகதிக்கு முன்னர் ஒளிபரப்பி முடிந்த தொலைக்காட்சி ஆக்கங்களை அதற்கடுத்த வருடத்தில் விருது வழங்கும் விழாவுக்காகச் சமர்ப்பிக்க முடியும்.
  • விண்ணப்பங்கள் கோரப்படுவது தொடர்பில் இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்கள் மூலம் அறிவிக்கப்படும்.
  • விண்ணப்பப் படிவத்துடன் தொலைக்காட்சி ஆக்கங்கள் உள்ளடங்கிய டீ.வி.டீ. அல்லது வி.எச்.எஸ் ஒளி நாடாக்களை சமர்ப்பிக்க வேண்டும்.
  • தொலைக்காட்சி விருது வழங்கும் விழாவில் ஒளிபரப்பப்படாத பயிலுநர் தொலைக்காட்சி குறுந்திரைப்படங்களுக்கும் விருது வழங்கப்படும்.
  • அனைத்துத் தொலைக்காட்சி ஆக்கங்களையும் அத்தொலைக்காட்சி நிறுவனத்தின் சட்டபூர்வ உரிமையாளர்களின் சான்றிதழுடன் ஒப்படைக்க வேண்டும்.