Sinhala (Sri Lanka)English (United Kingdom)

நிகழ்ச்சி நாள்காட்டி

ஜனவரி 2018
ஞா தி செ பு வி வெ
31 1 2 3 4 5 6
7 8 9 10 11 12 13
14 15 16 17 18 19 20
21 22 23 24 25 26 27
28 29 30 31 1 2 3
நீங்கள் இங்கே உள்ளீர்கள் : நிறுவனங்கள் சிங்கள அகராதி அலுவலகம்

சிங்கள அகராதி அலுவலகம்

Website :- www.sinhaladictionary.lk

வரலாற்று ரீதியான பின்னணி

சிங்கள மொழிக்காக அகராதி முறையிலான அகராதி இன்மையால் ஏற்படக்கூடிய பாதகமானநிலைகளைப் 19ஆம் நூற்றாண்டின் இறுதித் தசாப்தங்கள் இரண்டில் இலங்கைக்கு வருகை தந்த ஆங்கிலேயப் பண்டிதர்கள் இருவர் முதலில் எடுத்துக்காட்டினர். ஆயினும் இதற்கு முன்பிருந்தே குறிப்பாக, 1845ல் ரோயல் ஆசிய சங்கத்தின் இலங்கைக் கிளையை ஆரம்பித்ததன் பின்னர் சிங்கள மொழியையும் கலாசாரத்தையும் கற்றறிவதிலிருந்த அக்கறை வளர்ச்சியடைந்ததையடுத்து, இத்துறைகளில் ஆராய்ச்சிகளில் ஈடுபட்ட வெளிநாட்டு பண்டிதர்கள் பெரிய ஆங்கில மொழியையும் கற்றுக்கொண்ட உள்ளூர் கல்விமான்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்துக்கொண்டிருந்தது.

1881ல் அப்போது இலங்கையில் கல்விப் பணிப்பாளர் பதவியை வகித்த சாள்ஸ் புறூஸ் (Charles Bruce) அவர்கள் மேற்குறிப்பிட்ட குறைபாடு தொடர்பாக அப்பின்னணியிலிருந்து கவனம் செலுத்தினார். அதன் பின்னர் 1884ல் இலண்டனில் இந்திய நூலகப் பொறுப்பாளராகவிருந்த ரெய்னோல்ட்ஸ் ரொஸ்ட் (Reinhold Rost) அவர்கள் இக்குறைபாடு முடிந்தளவு விரைவாக நிரப்பப்பட வேண்டியதன் அவசியம் பற்றி நிருபமொன்றை ரோயல் ஆசிய சங்கத்தின் கிளைக்குச் சமர்ப்பித்தார்.

அவ்வாண்டிலேயே இலங்கை ஆளுநரின் தலைமையில் கூடிய மேற்படி சங்கத்தின் மகாசபைக் கூட்டத்தின்போது அகராதி தயாரிக்கப்பட வேண்டிய முறைபற்றிப் பரிந்துரை செய்வதற்கு ஒரு குழு அமைக்கப்பட்டாலும் அது தொடர்ந்து இயங்கியதாகத் தெரியவில்லை.

அதன் பின்னர் சுமார் நாற்பது ஆண்டு காலம் நிலைமை இவ்வாறிருந்தபோது அதுபற்றி ஞாபகப்படுத்தி முதலி ஏ. மென்டிஸ் குணசேகர கல்விப்பணிப்பாளருக்கு அனுப்பிய கடிதம் ரோயல் ஆசிய சங்கத்திற்கு ஆற்றுப்படுத்தப்பட்டது. (1923) அதன் பிரகாரம் உடனே செயற்பட்ட சங்கம் மேற்குறிப்பிட்ட நோக்கத்தை நிறைவேற்றிக்கொள்வதற்காகக் கொழும்பு யுனிவர்சிட்டி கொலெஜின் அதிபராகவிருந்த ஆர்.மார்ஸ் (R.Marrs) அவர்களின் தலைமையில் குழுவொன்றை அமைத்தது. 1925ல் சமர்ப்பிக்கப்பட்ட அக் குழு அறிக்கையின் பிரகாரம் கலை செயல்முறையைப் பின்பற்றி சிங்கள அகராதியொன்று தயாரிக்கப்படவேண்டும் எனத் தீர்மானிக்கப்பட்டது. (1926)

அகராதியின் ஆரம்பம்

அதன் பின்னர் அதற்குரிய அரச உதவிகளைப் பெற்றுக்கொண்டு 1927 மார்ச் மாதத்தில் சிங்கள அகராதி தயாரிப்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. அதன் பதிப்பாசிரியர் குழாத்திற்கு டீ.பீ. ஜயதிலக்க அவர்கள் பிரதம ஆசிரியராகவும், மென்டிஸ் குணசேகர, மற்றும் டப்ளியு.எப். குணவர்தன போன்ற முதலிமார்கள் துணையாசிரியர்களாகவும் ரோயல் ஆசிய சங்கத்தினால் நியமிக்கப்பட்டனர். அதற்கிடையில் சங்கத்தின் அழைப்பையேற்று இலங்கைக்கு வருகை தந்த ஜெர்மன் இனத்தவரான பேராசிரியர் வில்ஹெல்ம் கைகர் (Wilhelm Geiger) அவர்களுக்கு ஆசிரியர் குழாத்தின் பணிப்பாளர் பதவி ஒப்படைக்கப்பட்டது. அத்துடன் எல்.ஜே.பி. ரர்னர் (Turner) அவர்களின் தலைமையில் கட்டுப்பாட்டுச் சபையொன்றும் அமைக்கப்பட்டது.

கருத்திட்டமும் முன்னேற்றமும்

ஆரம்பத்திலே ஆங்கில அர்த்தத்துடனான சிங்கள அகராதி (சிங்கள - ஆங்கில) மற்றும் சிங்கள அர்த்தத்துடனான சிங்கள அகராதி (சிங்களம் - சிங்களம்) எனத் திட்டமிடப்பட்ட இரண்டு கருத்திட்டங்களாக இருந்தன. அதற்கான நூல்கள் உள்ளிட்ட அலுவலக ரீதியிலான அடிப்படைத் தேவைகளை வழங்கும் பொருட்டும் தரவுகளைச் (date) சேகரித்துக்கொள்ளும் பொருட்டும் முதல் சில வருடங்கள் பயன்படுத்தப்பட்டதன் பின்னர், 1935ல் சிங்கள - ஆங்கில அகராதியின் முதலாவது இதழும் வெளியிடப்பட்டது. ஆனால் பல்வேறு காரணங்களினால் அகராதியின் தயாரிப்புப் பணிகளின் முன்னேற்றம் எதிர்பார்க்கப்பட்ட வேகத்தைவிடக் குறைவாகவே இருந்தது.

அகராதிப் பணியகத்தின் நிர்வாகம் 1942ல் ரோயல் ஆசிய சங்கத்திலிருந்து இலங்கைப் பல்கலைக் கழகத்திற்கும், அதன் பின்னர், 1972ல் கலாசார அலுவல்கள் அமைச்சிடமும் ஒப்படைக்கப்பட்டது. 2001 வரை இம்முழுமையான காலப் பகுதியில் பிரதம ஆசிரியர் பதவியில் முறையே, பேராசிரியர் டீ.ஈ. ஹெட்டி ஆராச்சி, ஜுலியஸ் த லெனரொல், கலாநிதி பீ.பி.எப். விஜேரத்ன, பேராசிரியர் டீ.ஜே. விஜேரத்ன (இணை - பிரதம), கலாநிதி பீ.பி. சன்னஸ்கல, பேராசிரியர் விமல் ஜி. பலகல்லே, பேராசிரியர் வினி விதாரண போன்ற கல்விமான்கள் சேவையாற்றினர். பேராசிரியர் ஆனந்த அபேசிறிவர்தன தற்பொழுது பிரதம ஆசிரியர் பதவியில் சேவையாற்றுகின்றார்.

இற்றைவரை சிங்கள - ஆங்கில அகராதிகள் இரண்டின் இதழ்கள் வெளியீடு பெரும்பாலும் சமாந்தரமாக நிறைவேறினாலும், 1975ல் கலாசார அலுவல்கள் அமைச்சு மேற்கொண்ட தீர்மானத்தின் பிரகாரம் சிங்கள - சிங்கள அகராதி கருத்திட்டத்திற்கு முன்னுரிமையளிக்கப்பட்டதன் மூலம் அதை முடிந்தளவு விரைவாகப் பூர்த்திசெய்யத் திட்டங்கள் தயாரிக்கப்பட்டன. 1982ல் அதை மேலும் துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டதால் 1995 ஏப்பிறல் மாதத்தில் 26 தொகுதிகளைக் கொண்ட முழுமையான 'சிங்கள அகராதி' யை அச்சிட்டு வெளியிட முந்தது.

இந்தச் சிங்கள - சிங்கள அகராதி வெளியிடப்பட்டதையடுத்து அதன் மீள் - திருத்தப்பட்ட இரண்டாவது பதிப்பொன்றை, புதிய தலைப்புச் சொற்களை உள்ளடக்கி, தயாரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன் முதலாவது, இரண்டாவது, மூன்றாவது, நான்காவது பாகங்கள் இப்பொழுது வெளியிடப்பட்டுள்ளன. ஐந்தாவது பாகத்தின் கட்டுரைகள் எழுதி முடிக்கப்பட்டுள்ள அதே நேரத்தில் திருத்தத்தின் பின்னர் 2007 ஆகஸ்டில் அச்சுக்கு ஒப்படைக்க முடியும்.

தாமதமாகியிருந்த சிங்கள - ஆங்கில அகராதியின் பணிகள் தற்பொழுது நிறைவேறிக்கொண்டிருக்கின்ற அதேநேரத்தில், 26வது பாகம் தற்பொழுது அச்சிட்டு வெளியிடப்பட்டுள்ளது. அதன் 25வது பாகம் ஆகஸ்ட் மாதத்தில் அச்சிட்டு வெளியிடப்படவிருக்கின்றது. 27வது பாகம் அச்சுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சிங்கள - சிங்கள அகராதியின் பெரிய அளவு

தற்பொழுது பூர்த்தியாகியிருக்கின்ற மேற்குறிப்பிட்ட சிங்கள - சிங்கள அகராதி பெரிய அளவில் 13,908 பக்கங்களைக் கொண்டுள்ளது. வரைவிலக்கணத்திற்காக எடுக்கப்பட்டுள்ள தலைப்பு பதங்களின் எண்ணிக்கை 2,06,692 ஆகும். அது 26 பாகங்களையும் 46 இதழ்களையும் கொண்டுள்ளது.

சிங்கள சுருக்க அகராதி

மேற்குறிப்பிட்ட அகராதி பூரணத்துவத்தில் எந்த அளவுக்கு உயர்ந்த இடத்தை வகித்தாலும் அது அளவில் பெரிதாக இருப்பதன் காரணமாக நூலகம் போன்ற நிறுவனங்களைத் தவிர்த்து பொது வாசகர்களில் பெரும்பாலானவர்களுக்கு அதைத் தனிப்பட்ட முறையில் வாங்கிப் பயன்படுத்துவது கஸ்டமான காரியம் என்பது தெளிவான விடயமாகும்.

இதுபற்றிக் கவனத்தில் எடுத்துக்கொண்ட போது கலாசார அமைச்சின் ஆலோசனைப்படி, பொதுவான வாசகர்கள், எழுத்தாளர்கள், ஆசிரியர்கள்-மாணவர்கள் உள்ளிட்ட அனைவரும் தனிப்பட்ட முறையில் கொள்வனவு செய்து படிக்கக்கூடிய சுருக்கமான சிங்கள அகராதியொன்றை சுமார் 1000 பக்கங்களில் இரண்டு பாகங்களாக இயற்றும் பணி 1999ல் ஆரம்பிக்கப்பட்டது. இப்பொழுது அதன் இரண்டாம் பாகத்தின் மெய்ப்புத் திருத்தும் பணிகள் நிறைவேறிக் கொண்டிருக்கின்ற அதே நேரத்தில் 2007 செப்டம்பர் மாதத்தில் வாசகர்களிடம் ஒப்படைக்க முடியும். இதன் முதற் தொகுதியின் அச்சுப் பணிகள் முடிவடைந்துள்ளன.

சிங்கள - ஆங்கில - தமிழ் அகராதி

காலத்தின் தேவைகளைக் கருத்திற்கொண்டு இரண்டு பாகங்களைக் கொண்டதாக சிங்கள - ஆங்கில - தமிழ் அகராதியொன்றை இயற்றும் பணிகள் 2002ல் ஆரம்பிக்கப்பட்டன. தற்பொழுது அதன் முதலாவதில் சிங்கள - ஆங்கில - தமிழ் அர்த்தங்கள் வரை முடிவடைந்துள்ளன. இவற்றின் ஆய்வுப் பணிகளை முடித்து கணினி மயப்படுத்தியதன் பின்னர் அச்சிடும் பணியை மேற்கொள்ள முடியும்.

 

Sinhala Dictionary Office website :- www.sinhaladictionary.lk

Last Updated ( Tuesday, 17 December 2013 04:15 )