Sinhala (Sri Lanka)English (United Kingdom)

நிகழ்ச்சி நாள்காட்டி

நொவெம்பர் 2017
ஞா தி செ பு வி வெ
29 30 31 1 2 3 4
5 6 7 8 9 10 11
12 13 14 15 16 17 18
19 20 21 22 23 24 25
26 27 28 29 30 1 2
நீங்கள் இங்கே உள்ளீர்கள் : பிரிவுகள் கலைப்பிரிவு

கலைப்பிரிவு

கலாசாரத் துறைக்குரிய அனைத்துப் பணிகளையும் மேம்படுத்துவது நோக்கமாகும். இதற்கான தலைமை நிலையத்தை மைய நிலையமாகக் கொண்டு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஒவ்வொரு பிரதேச அலுவலகத்திற்கும் கலாசார உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாவட்ட அடிப்படையில் கலாசார உதவிப் பணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தேசிய அடிப்படையில் கலாசாரப் பணிகளை நெறிப்படுத்துதல், ஒழுங்குசெய்தல் இதன் நோக்கமாகும்.

கலைப்பிரிவினால் பின்வரும் சேவைகள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.

01. பாரம்பரிய ஓவியக்கலைஞர் கருத்திட்டம்.

கலாசார அலுவல்கள் திணைக்களம், தேசிய அரும்பொருட் திணைக்களம், இலங்கை பயிலுநர்களுக்குப் பயிற்சியளிக்கும் அதிகாரசபை ஆகிய மூன்று நிறுவனங்களின் அனுசரணையின் கீழ் நடத்தப்படுகின்றது.

தலைசிறந்த ஓவியக் கலைஞர் எஸ்.பி. சாள்ஸ் அவர்களின் நெறிப்படுத்தலின் கீழ் இது நடத்தப்படுகின்றது. இலங்கைப் பல்கலைக்கழகத்தில் அழகியல் கல்வி நிறுவனத்தில் சிங்களக் கலை மற்றும் வடிவமைப்புத் தொடர்பான விரிவுரையாளரும் பிரிவுத் தலைவருமாகவிருந்த கலாசூரி எஸ்.பி. சாள்ஸ் ஓவிய விரிவுரையாளரின் முடிவு இது இலங்கையில் பட்டப்படிப்பைத் தவிர்த்து அரச அனுசரணை வழங்குகின்ற ஒரே பாடநெறியாகும் என்பதாகும். இது சர்வதேச டிப்ளோமாவுக்கு இணையானது என திரு.சாள்ஸ் தெரிவித்துள்ளார்.

கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் நிதி உதவியின் மூலம் இந்த ஓவியக்கலைக் கருத்திட்டம் நடத்தப்படுகின்றது.

மேலே

02. கலை நிலையங்களைப் பதிவுசெய்தல் மற்றும் உதவி வழங்கல்.

தனியார் கலை நிலையங்களை கலாசார அலுவல்கள் திணைக்களத்தில் பதிவு செய்கின்ற புதிய யாப்புத் தொடரில் 05ஆம் இலக்கத்தின் கீழ் காட்டப்படுகின்ற தகைமைகளையுடைய ஒருவரினால் அல்லது அத்தகைய தகைமைகளைக் கொண்ட ஆசிரியர் குழாம் ஒன்றை ஈடுபடுத்தி வேறொருவரினால் அல்லது சபையினால் நடத்தப்படுகின்ற, 20 மாணவர்களுக்குக் குறையாத எண்ணிக்கையில் தினசரி சராசரியாக வருகை தருகின்ற, யாப்புத் தொடரில் 02ஆம் இலக்கத்தின் கீழுள்ள குறித்துரைக்கப்பட்ட வகையைச் சேர்ந்தவர்களில் ஒரு வகைக்கு சம்பந்தப்பட்ட கலைப் பாடங்களைக் கற்பிக்கின்ற அரசாங்கத்திற்கு உரித்தில்லாத நிறுவனங்கள் கலாசார அலுவல்கள் திணைக்களத்தில் பதிவு செய்யப்படுகின்றன.

கிராமிய அடிப்படையில் இலைமறை காயாக இருக்கின்ற இந்நாட்டுக்கே இயல்பாக உள்ள கலாசார அம்சங்களை மெருகூட்டுவதற்குத் திணைக்களத்தின் பங்களிப்பைக் கலை நிலையத்தினூடாக வழங்குகின்றது. தனியார் கலை நிலையங்களைத் திணைக்களத்தில் பதிவுசெய்து நிதி ரீதியான மற்றும் பொருள் ரீதியான உதவிகளை அனுப்புவதன் மூலம் கலை நிலையங்களை ஊக்குவிப்பது கலை நிலையங்களைப் பதவு செய்வதன் அடிப்படை நோக்கமாகும். இசைக்கருவிகளையும் உபகரணங்களையும் வழங்கி கலை நிலையங்கள் ஊடாக நடனம், நாடகம், ஓவியம் உள்ளிட்ட உள்ளூர் கலாசார பிரிவுகளின் வளர்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலே

03. கலைஞர்களுக்கான தேசிய நம்பிக்கைப்பொறுப்பு.

இன்றைய அரசின் மஹிந்த சிந்தனையில் கலை நிலத்தைப் பயிரிடும் கருத்திட்டத்தின் கீழ் இலங்கையின் கலைத்துறையில் அனைத்து அமய மற்றும் அமயமல்லாத கலைஞர்களின் நன்மை கருதி இந்நம்பிக்கைப் பொறுப்பு நிறுவப்பட்டுள்ளது.

இதில் நாடகம், இசை, நடனம், தொலைக்காட்சி, சினிமா போன்ற அமய கலைஞர்களைப் போன்று எழுத்தாளர்கள், கவிஞர்கள், ஓவிய சிற்பக் கலைஞர்கள் போன்ற அமயமல்லாத அனைத்துக் கலைஞர்களும் அடங்குவார்கள்.

இலங்கையின் அமயமல்லாத அனைத்துக் கலைஞர்களின் நலனோம்பல் கலைஞர்கள், கலைப்பணிகளின் அடையாளம், மேம்பாடு, கலைஞர்களின் திறமைகளை மதித்தல், திறமைகளை மெருகூட்டுவதற்குத் தேவையான அனைத்து வசதிகளையும் வழங்குதல், உரிய நுண்கலைப் பயிற்சியை அளித்தல், கலைஞர்கள் மரணிக்கின்றபோது அமங்கல நிகழ்வுக்கான உதவிகளை வழங்குதல், பொதுவாக அனைத்துக் கலைஞர்களுக்கும் சிக்கலற்ற தெளிவான சூழலின் மீது சுயகௌரவத்துடன் கலைத் துறையை வளர்ப்பதற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குதல் இந்நம்பிக்கைப் பொறுப்பின் நோக்கமாகும். நம்பிக்கைப் பொறுப்புத் திணைக்களம் இதன் பணிகளை நிர்வகிக்கிறது. இந்நிதியத்தை முன்னேற்றுவதற்காக உள்நாட்டு வெளிநாட்டு நன்கொடைகள் எதிர்பார்க்கப்படுகின்றன.

மேலே

04. கலாசார பெறுமதியுடைய பல்வேறு கலாசார அம்சங்களுக்கும் நபர்களுக்கும் உதவி வழங்குதல்.

கலாசார பெறுமதியுடைய பெரஹர, பல்வேறு பண்டிகைகள் மற்றும் பல்வேறு கலைத்துறைகளில் ஈடுபட்டுள்ள கலைஞர்கள் சுகவீனமடையும் போது, அனர்த்தங்களுக்குள்ளாகும்போது மற்றும் கலைஞர்களின் அமங்கல நிகழ்வுகளின் போது நன்கொடை வழங்குவதற்கு கலாசார அலுவல்கள் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

  1. கலைஞர்களுக்கு உதவுதல்.
    கலைத்துறையில் ஈடுபட்டிருக்கின்ற, நிரந்தர வருமானமற்ற அல்லது ஓய்வூதியம் பெறாத 60 வயதைக் கடந்துள்ள கலைஞர்களுக்கு இந்நன்கொடையைப் பெற்றுக்கொள்ள முடியும். அதற்காகத் தாம் உரித்தாக இருக்கின்ற பிரதேச செயலாளர் அலுவலகத்திலிருந்து விண்ணப்பங்களைப் பெற்றுக்கொள்ள வேண்டும். பிரதேச செயலாளரின் பரிந்துரையுடன் கலாசார அலுவல்கள் திணைக்களத்திற்கு அவ்விண்ணப்பத்தை அனுப்புவதன் மூலம் இந்நன்கொடையைப் பெற்றுக்கொள்ளமுடியும். இது வருடம் முழுவதும் நடைமுறைப்படுத்தப்படுகின்ற நிகழ்ச்சித் திட்டமாகும்.
    இப்பணம் ஒவ்வொரு வருடமும் செலுத்தப்படும். 2500/- ரூபா வீதம் செலுத்தப்பட்ட இந்நன்கொடை 2008ஆம் ஆண்டு முதல் 3000/- வரை உயர்த்தப்பட்டுள்ளது.
  2. பெரஹர நன்கொடை
    நாட்டின் பல்வேறு பகுதிகளில் அப்பகுதிகளுக்கு இயல்பாகவே உரித்தாகியிருக்கின்ற கலாசார மற்றும் சமூக பெறுமதியுடைய பெரஹராக்கள் நடத்தப்படுகின்ற அதே நேரத்தில் அப்பெரஹராக்களைத் தொடர்ந்து நடாத்தி பாதுகாப்பதற்காக விடுக்கப்படுகின்ற கோரிக்கையைக் கவனத்திற் கொண்டு பெரஹரா நன்கொடைப் பணம் வழங்கப்படும். இந்நன்கொடைக்கான விண்ணப்பத்தைப் பிரதேச செயலாளர் அல்லது மாவட்ட செயலாளரின் பரிந்துரையுடன் கலாசார திணைக்களத்திற்குச் சமர்ப்பிக்க வேண்டும். நன்கொடைப் பணம் பிரதேச செயலாளருக்கு வழங்கப்படும்.
  3. பல்வேறு பண்டிகைகளுக்கு உதவுதல்.
    கலாசார பெறுமதியுடைய பல்வேறு பண்டிகைகளுக்கு அளிக்கப்படுகின்ற நன்கொடையாகும். பிரதேச செயலகப் பிரிவுகளின் அடிப்படையில் இப்பணத்தைப் பெற்றுக்கொள்வதற்காகப் பல்வேறு கலைத்துறைகளில் ஈடுபட்டுள்ள நபர்களினால் ஒழுங்கு செய்யப்படுகின்ற பல்வகை கலாசார பண்டிகைகளுக்காக கலாசார திணைக்களத்தின் மூலம் நன்கொடைப்பணம் செலுத்தப்படுகின்றது. இந்நன்கொடைக்கான விண்ணப்பத்தைப் பிரதேச செயலாளர் அல்லது மாவட்ட செயலாளரின் பரிந்துரையுடன் கலாசார திணைக்களத்திற்குச் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் நன்கொடைப் பணம் பிரதேச செயலாளருக்கு வழங்கப்படும்.
  4. அமங்கல நிகழ்வுகளுக்கு உதவி.
    நாட்டுக்குப் புகழ் தேடித் தந்த புகழ்பெற்ற கலைஞர்கள் மரணமடைகின்றபோது அவர்களின் மரணச் சடங்குகளுக்கும் ஒருசில கலைஞர்கள் மரணமடைந்து அவர்களின் மூன்றுமாதப் பூர்த்தியை முன்னிட்டுச் செய்யப்படுகின்ற புண்ணியதான நிகழ்வுக்கும் கலாசாரத் திணைக்களம் நன்கொடை வழங்கும். அவர்களால் நாட்டுக்கும் கலைத்துறைக்கும் செய்யப்பட்ட சேவையைக் கௌரவிக்குமுகமாக இந்நன்கொடை வழங்கப்படுகிறது.
  5. மருத்துவ உதவி.
    கலைஞர்கள் சுகவீனமுற்று நிர்க்கதியான நிலையில் இருக்கின்றபோது அவர்கள் மருத்துவ வசதிகளைப் பெற்றுக்கொள்வதற்காக நன்கொடை தேவைப்படுகின்ற கலைஞர்களுக்கு அளிக்கப்படுகின்ற உதவித்திட்டமாகும். இது வருடம் முழுவதும் நடைமுறைப்படுத்தப்படுகின்ற நிகழ்ச்சித்திட்டமாகும். பண வசதியற்றிருக்கின்ற ஒருசில கலைஞர்களுக்கு, அவர்கள் மருத்துவ சிகிச்சையைப் பெற்றுக்கொள்வதற்கு பணம் இல்லாதபோது ஏதேனும் உதவி செய்யும்படி கேட்குமிடத்து அவர்களின் மருத்துவ அறிக்கை மற்றும் பிரதேச செயலாளரின் பரிந்துரை என்பவற்றின் மீது நன்கொடைப் பணம் செலுத்தப்படும்.

மேலே

05. கலாசார சங்கங்களைப் பதிவு செய்தல்.

ஒழுங்குமுறையான நிறுவன அமைப்பைக் கொண்டுள்ள கலாசார சேவையின்பொருட்டு மையப்படுத்தப்பட்டுள்ள கிராமிய அடிப்படையில் அல்லது பிரதேச அடிப்படையில் அல்லது அகில இலங்கை அடிப்படையில் ஒழுங்கமைந்துள்ள தொண்டர்கள் ஒன்று சேர்ந்து ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள கட்டமைப்புக்குள் அமைந்துள்ள நிறுவனங்கள் கலாசார சங்கமாக ஏற்றுக்கொள்ளப்படும். இச்சங்கங்களைப் பதிவு செய்வதற்காக ஒரு யாப்புத் தயாரிக்கப்பட்டுள்ள அதே நேரத்தில் சங்கங்களுக்காக நன்கொடைப் பணம் செலுத்தப்படமாட்டாது.

தற்பொழுது இலங்கை முழுவதிலும் 451 கலாசார சங்கங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மேலே

06. கலாதேவி காப்புறுதி கலைஞர் காப்புறுதி.

பணக்கச்டமுள்ள கலைஞர்களுக்கான நன்கொடைகளைப் பெறுகின்ற கலைஞர்களில் கலாதேவி காப்புறுதிக்காகத் தற்பொழுது 19பேர் உதவுதொகை செலுத்துகின்றனர். அவர்களுக்குக் கிடைக்கின்ற பணக் கச்டமுள்ள கலைஞர்களுக்கான நன்கொடைப் பணத்தில் 900/- ரூபா வீதம் காப்புறுதி கூட்டுத்தாபனத்திற்கு அனுப்பப்படுகின்ற அதே நேரத்தில் திடீர் விபத்துகளின் போது, சுகவீனமுறும்போது இக்காப்புறுதி நலன்களைப் பெற்றுக்கொள்ளமுடியும். 75 வயது பூர்த்தியடைந்ததன் பின்னர் இந்நலன்கள் இல்லாதொழிந்துவிடும்.

மேலே

07. சரஸ்வதி ஓய்வூதியத் திட்டம்.

2008.08.11ஆம் திகதி சமூக, சமூக நலனோம்பல் அமைச்சின் கீழ் ஸ்தாபிக்கப்பட்டுள்ள இலங்கை அமைச்சுடனும் கலாசார அலுவல்கள் திணைக்களத்துடனும் சேர்ந்து ஸ்தாபிக்கப்பட்டுள்ள புதிய நிகழ்ச்சித் திட்டமாகும். நிர்க்கதியான நிலையிலிருக்கின்ற கலைஞர்களைப் பேணிக் காத்தல், போசணையளித்தல், பொருளாதார ஆற்றலை வளர்த்தல் தேசத்தின் கடமையும் அரசாங்கத்தின் பொறுப்புமாகும். இக்கடமைகளையும் பொறுப்புகளையும் செயல்முறையில் நிறைவேற்றுவதற்காகக் கலைஞர்களுக்காக ஸ்தாபிக்கப்பட்டுள்ள அரச ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகப்படுத்தி அதன்மூலம் கலைஞர்களுக்கு நிரந்தர மாதாந்த ஓய்வூதியம் இதன் மூலம் வழங்கப்படுகின்றது.

இத்திட்டத்தின் சிறப்பம்சம் யாதெனில், ஓய்வூதிய உடன்படிக்கை உறுதிக்குச் செலுத்த வேண்டிய மாதாந்த ஓய்வூதியத் தவணைப் பணத்தைக் கலாசார அலுவல்கள் திணைக்களம் செலுத்துவதாகும்.

இதற்கு உரித்துடையவர்கள் 18 - 59 வயதுக்கு இடைப்பட்ட கலைஞர்களாவர். இவர்கள் அரசாங்கத்தின் ஏனைய ஓய்வூதியத்துக்கு உரித்துடையவராக இருத்தலாகாது. அத்துடன் கமக்காரர் அல்லது மீனவர் ஓய்வூதியத் திட்டத்திற்கு உதவுதொகை செலுத்துபவராக இருத்தலாகாது.

18 - 55 வயதுக்கிடையில் உதவுதொகை வாய்ப்பைப் பெறுகின்றபோது 60 வயது முதல் சீவிய காலம் வரையும் மாதாந்த ஓய்வூதியத்தையும் 56 - 59 க்கு இடையில் உதவுதொகை வாய்ப்பைப் பெறுகின்ற போது சேர்ந்த திகதியிலிருந்து 5 வருடங்களின் பின்னர் சீவிய காலம் வரை மாதாந்த ஓய்வூதியம் உதிர்தாகும்.

சரஸ்வதி ஓய்வூதியத் திட்டத்தில் முதல் உறுதிப் பயனாளிகளாக இருந்தவர்கள் திரு.எம்.ஜி. உபசேன, திரு.டி.வை.ஜி. உபநந்த, திரு.ஓ.பி.ஜி. ரவீந்திர சம்பத் சியாம குமார, எஸ்.வை.ஜி. விஜேசேன, டி.வை.ஜி. சிறிபால ஆகியோராவர். இக்கலைஞர்களுக்கு 2009ல் கண்டி ஸ்ரீ தலதா பெரஹரா முடிவில் சனாதிபதி உறுதிகளை வழங்கினார்.

முறையே 59, 58, 57 வயதைப் பூர்த்தி செய்த 71 கலைஞர்களுக்கு உறுதிகள் வழங்கும் நிகழ்வு கலாசார, தேசிய மரபுரிமைகள் அமைச்சின் கேட்போர் கூடத்தில் 2009.10.21 ஆம் திகதி இடம்பெற்றது. தற்பொழுது அவ்வெண்ணிக்கை 81 வரை அதிகரித்துள்ளது.

இவர்களுக்காக மாதாந்தம் 2,55,802/- ரூபா பணம் கலாசார திணைக்களத்திலிருந்து சமூக பாதுகாப்பு சபைக்கு அனுப்பப்படுகிறது. 2013ஆம் ஆண்டு முதல் இவ்வுறுதி பயனாளிகளுக்கு மாதாந்தம் 3000/- ரூபாவுக்கு மேற்பட்ட தொகை மாதாந்த ஓய்வூதியமாகக் கிடைக்கின்ற அதேநேரத்தில் சீவியகாலம் முழுவதற்கும் அது நடைமுறைப்படுத்தப்படும்.

மேலே

08. கலாபூஷண விருது வழங்கும் விழா.

கலாசார ரீதியில் பார்க்கின்றபோது ஒரு நாட்டின் உயிர் நாடியாக இருக்கின்ற கலைஞர்கள் தமது, காலம், செல்வம், உழைப்பு என்பவற்றை அர்ப்பணித்து பல்வேறு கலாசார அம்சங்களைப் பாதுகாப்பதில் முன்னோடியாக செயற்பட்டாலும் ஒழுங்கான முறையில் அவர்கள் மதிப்பீட்டுக்கு உட்படுத்தப்படாததன் காரணமாக 1984ஆம் ஆண்டில் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர், கலாசார அலுவல்கள் பணிப்பாளர் ஆகியோர் இவர்களைக் கௌரவிப்பதற்கு கலாபூஷண அஞ்சலி விழாவை ஆரம்பித்தனர். அதிலிருந்து ஒவ்வொரு வருடமும் அவர்களின் உன்னத சேவைகளைப் பாராட்டிக் கௌரவிக்கப்படுகின்ற கலைஞர்களின் எண்ணிக்கை வருடாவருடம் அதிகரித்தது. பல்வேறு துறைகளில் (இசை, நடனம், நாடகம், இலக்கியம், ஓவிய சிற்பம், எழுத்துக்கலை, பல்வேறு விடயங்கள் போன்ற வகையில்) ஈடுபட்ட கலைஞர்கள் (சிங்கள, தமிழ், முஸ்லிம்) இன, மத வேற்றுமையின்றி கௌரவிக்கப்பட்டனர். முஸ்லிம் கலாசாரத் திணைக்களமும் இந்து கலாசார திணைக்களமும் இதன்போது கலாசாரத் திணைக்களத்துடன் சேர்ந்து செயற்படும்.

கலாபூஷணம் விருது பட்டியல் (சிங்களம்)PDF

கலாபூஷணம் விருது பட்டியல் (இந்து)PDF

கலாபூஷணம் விருது பட்டியல் (முஸ்லிம்)PDF

மேலே

Last Updated ( Wednesday, 10 December 2014 05:08 )