Sinhala (Sri Lanka)English (United Kingdom)

நிகழ்ச்சி நாள்காட்டி

ஜூலை 2017
ஞா தி செ பு வி வெ
25 26 27 28 29 30 1
2 3 4 5 6 7 8
9 10 11 12 13 14 15
16 17 18 19 20 21 22
23 24 25 26 27 28 29
30 31 1 2 3 4 5
நீங்கள் இங்கே உள்ளீர்கள் : பிரிவுகள் இலக்கிய மற்றும் வெளியீட்டுப் பிரிவு

இலக்கிய மற்றும் வெளியீட்டுப் பிரிவு

கலாசாரக் கலைத் துறையை மேம்படுத்துவதற்காகத் தலைமை அலுவலகத்தை மைய நிலையமாகக் கொண்டு நடவடிக்கைகளும் இலக்கிய மற்றும் வெளியீட்டுப் பணிகளும் நடத்தப்படுகின்றன. கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் மூலம் வெளியிடப்படுகின்ற அனைத்து நூல்களையும் அச்சிடுதல் வெளியிடுதல் இப்பிரிவின் முக்கிய பணியாகும். அதற்கு மேலதிகமாக பிரதேச / மாவட்ட / மாகாண போட்டிகளையும் இலக்கிய விழாக்களையும் ஒழுங்குசெய்தல், எழுத்தாளர்களுக்கான உதவித் திட்டத்தை நடைமுறைப்படுத்துதல் என்பவையும் இப்பிரிவின் கடமைகளாகும்.

இப்பிரிவின் மூலம் பின்வரும் சேவைகள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.

சிங்கள அகராதி, சிங்கள கலைக்களஞ்சியம், கலாசார பெறுமதியுடைய ஏனைய ஆக்கங்களை அச்சிடுதல்.

இலங்கையின் கலாசார மற்றும் வரலாற்று ரீதியான முக்கியத்துவம் தொடர்பாகவும், இயற்கை அழகியல், காலநிலை முக்கியத்துவம் தொடர்பாகவும் உள்நாட்டு வெளிநாட்டு மக்களுக்கு அறிவூட்டுவதை நோக்கமாகக் கொண்டு இக்கருத்திட்டம் நடத்தப்படுகின்றது.

மகாவம்சம்

1956 - 1978 வரை இலங்கை வரலாற்றில் வரலாற்று ரீதியான சமூக / அரசியல் / பொருளாதார / கலாசார தகவல்களைச் சரியாக ஆவணப்படுத்துதல் மகாவம்சத்தை இயற்றுவதன் அடிப்படை நோக்கமாகும்.

2009ஆம் ஆண்டு முடிவடைகின்றபோது மகாவம்சத்தை அச்சிடுவதற்காக கணினிமயப்படுத்தித் தயாரிக்கப்பட்டது. 2010ஆம் ஆண்டு முடிவடைகின்றபோது மகாவம்சத்தைப் புதிதாக அச்சிடும் பணிகள் பூர்த்தியடைந்துள்ள அதே நேரத்தில் அது அச்சிடப்பட்டுக்கொண்டிருக்கின்றது.

மகாவம்ச பாடல் III, IV, V

கி.பி. 6ஆம் நூற்றாண்டு முதல் இறுதி வரை இலங்கையின் வரலாற்று ரீதியான தகவல்களை கவிதை நடையில் முன்வைப்பது இதன் நோக்கமாகும்.

தற்பொழுது மகாவம்ச பாடல் III, IV, V அச்சிடுவதற்காக கணினி மயப்படுத்தப்பட்டுத் தயாரிக்கப்பட்டுள்ளது.

பிரதேச / மாவட்ட / மாகாண மற்றும் தேசிய இலக்கிய போட்டிகளும் விழாக்களும்

மக்கள் மத்தியில் இலக்கிய மலர்ச்சியை ஏற்படுத்துதல், பிரதேச இலக்கிய வாதிகளினதும் கலைஞர்களினதும் ஆக்கபூர்வமான திறன்களை வெளிக்கொணர்ந்து அவர்களைக் கௌரவித்தல், சிறுவர் மற்றும் இளம் சந்ததியினரின் இலக்கிய கலை இரசனையை வளர்த்து அவர்களை ஆக்கப் பணிகளில் ஈடுபடுத்துதல், புத்தகங்கள் பத்திரிகைகளைப் படிப்பதிலும் கற்று ஆராய்வதிலும் ஈடுபடுத்துவன் மூலம் வாசிக்கும் இரசனையை வளர்த்தல். பொதுவாக நல்ல சமுதாயம் ஒன்றைக் கட்டியெழுப்புவதற்காக இலக்கியக் கலையைப் பயன்படுத்திக்கொள்வதை நோக்கமாகக் கொண்டு இந்நிகழ்ச்சித்திட்டம் நடத்தப்படுகின்றது.

இதன் அடிப்படை ஒழுங்கு செய்யும் பணிகளைப் பிரதேச செயலாளர் அலுவலகத்துடன் இடைச்சேர்க்கப்பட்டள்ள கலாசார உத்தியோகத்தர்கள் / கலாசார அபிவிருத்தி உதவியாளர்கள் மேற்கொள்கின்ற அதேநேரத்தில் போட்டியில் கலந்துகொள்வதற்கான விண்ணப்பப் படிவங்களைத் தாம் வதிகின்ற பிரதேசத்தின் பிரதேச செயலாளரிடமிருந்து பெற்றுக்கொள்ளமுடியும். பிரதேச அடிப்படையில் வெற்றிபெறுகின்ற வெற்றியாளர்கள் மாவட்டப் போட்டிகளிலும் மாவட்ட வெற்றியாளர்கள் மாகாண அடிப்படையிலான போட்டிகளிலும் மாகாண வெற்றியாளர்கள் தேசிய அடிப்படையிலான போட்டியிலும் பிரவேசிப்பார்கள். இவ்வொவ்வொரு சந்தர்ப்பத்திலும் அவர்கள் கௌரவிக்கப்பட்டு பெறுமதியான சான்றிதழும் பரிசும் (புத்தகங்கள்) வழங்கப்படும். தேசிய அடிப்படையிலான போட்டியின்போது பணப்பரிசும் வழங்கப்படும்.

2009ஆம் ஆண்டில் 294 பிரதேச செயலாளர் அலுவலகங்களிலும் 22 மாவட்ட செயலாளர் அலுவலகங்களிலும் போட்டிகளும் விழாக்களும் நடத்தப்பட்டுள்ள அதே நேரத்தில் தேசிய அடிப்படையில் 72 வெற்றியாளர்கள் தெரிவுசெய்யப்பட்டு பரிசு வழங்கும் விழா சிறப்பாக நடத்தப்பட்டது.

தேசிய இலக்கியப் போட்டித் தொடர்

கையெழுத்துப் பிரதிப் போட்டி

புதிய எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் நோக்கில் அரச இலக்கிய விழாவுக்கு இணையாக வருடாந்தம் உயர்ந்த தரத்திலான நாவல், சிறுகதை, செய்யுள் தொகுப்பு, சிறுவர் நாவல், சிறுகதை, விஞ்ஞானக் கட்டுரைகள், நாடகப் பிரதிகள், கட்டுரைத் தொகுப்புகள், சித்திரக் கதைகள் என்பவை அரச மட்டத்தில் வெளியிடப்படுகின்றன. இப்போட்டி திறந்த கையெழுத்துப் பிரதிப் போட்டி மாணவர் கையெழுத்துப் பிரதிப் போட்டி என இரு பிரிவுகளின் கீழ் நடத்தப்படும்.

மாணவர் கையெழுத்துப் பிரதிப் போட்டி.

இலங்கை மாணவர் சமுதாயத்தின் படைப்பாற்றலை வளர்த்தல், எழுதுவதில் வாசிப்பதில் ஈடுபட்ட இலக்கிய இரசனையுடைய மாணவர் சந்ததியொன்றை உருவாக்குவதற்குத் தேவையான பின்னணியை உருவாக்குதல் மற்றும் அவர்களின் கலைப் படைப்பாற்றலை அரச நிறுவன மட்டத்தில் மதிப்பீட்டுக்குட்படுத்துவது இந்நிகழ்ச்சித் திட்டத்தின் நோக்கமாகும். பத்திரிகை அறிவித்தலின் மூலம் இப்போட்டி தொடர்பாகப் பொது மக்களுக்கு அறிவூட்டப்படும்.

திறந்த கையெழுத்துப் பிரதிப் போட்டி

இப்போட்டி சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் நடத்தப்படுகின்ற அதே நேரத்தில் உயர் தரத்திலான இலக்கியப் படைப்புகளை அரச நிறுவனங்களின் கீழ் மதிப்பீட்டுக்குட்படுத்துதல் மற்றும் அத்துறைகளில் ஈடுபட்டுள்ள பயிலுநர் எழுத்தாளர்களை ஊக்குவிப்பது இந்நிகழ்ச்சித் திட்டத்தின் நோக்கமாகும். பத்திரிகை அறிவித்தல் மூலம் இப்போட்டி தொடர்பாக பொதுமக்களுக்கு அறிவூட்டப்படும்.

எழுத்தாளர்கள் உதவித்திட்டம்

புதிய எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் பொருட்டு அவர்களின் அச்சிட்ட நூல்களைக் கொள்வனவு செய்தல், மற்றும் அந்நூல்களை இலவசமாக நூல் நிலையங்களுக்கு விநியோகித்தல் இக்கருத்திட்டத்தின் நோக்கமாகும்.

திணைக்களத்தினால் விநியோகிக்கப்படுகின்ற விண்ணப்பப்படிவத்தைப் பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட புத்தகத்தின் பிரதியுடன் திணைக்களத்தில் ஒப்படைக்க வேண்டும். அத்துடன் அப்புத்தகங்கள் ஆய்வுச் சபையொன்றிடம் சமர்ப்பிக்கப்பட்டு அவர்கள் தீர்மானிக்கின்ற பெறுமதியுள்ள புத்தகங்களை 20% விலைக் கழிவுடன் கொள்வனவு செய்கின்றது. கொள்வனவு செய்கின்ற புத்தகங்களின் எண்ணிக்கையை ஆய்வுச் சபையே தீர்மானிக்கும்.

Last Updated ( Wednesday, 06 May 2015 08:24 )