Sinhala (Sri Lanka)English (United Kingdom)

 

நிகழ்ச்சி நாள்காட்டி

ஜூன் 2017
ஞா தி செ பு வி வெ
28 29 30 31 1 2 3
4 5 6 7 8 9 10
11 12 13 14 15 16 17
18 19 20 21 22 23 24
25 26 27 28 29 30 1
நீங்கள் இங்கே உள்ளீர்கள் : கருத்திட்டங்கள் தேசிய கலாபவனம்

தேசிய கலாபவனம்

நோக்கம்

இலங்கைக்குரிய கலாசார அடையாளத்தைப் பாதுகாத்துக்கொண்டு கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் சேவைகளை மிகச்சிறந்த முறையிலும் பயனுறுதிமிக்க வகையிலும் நடைமுறைப்படுத்துவதற்காக கலைஞர்களின் தலைசிறந்த புராதன ஓவியங்களைப் பேணிப்பாதுகாப்பது இதன் நோக்கமாகும். தேசிய கலாபவனத்தில் நிரந்தர காட்சிக்கூடத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள ஓவியங்களும் கண்காட்சிக்கு இடவசதி போதாமை காரணமாகக் களஞ்சிப்படுத்தி வைக்கப்பட்டுள்ள பெறுமதியான ஓவியங்கள் காலப்போக்கில் அழிந்துபோகும் அச்சுறுத்தலுக்கு முகங்கொடுக்க இடமுண்டு.

இவ்வோவியங்களைப் படைத்த சில ஓவியர்கள் தற்பொழுது இறந்துபோயுள்ளனர் அல்லது வெளிநாடுகளுக்குப் போயுள்ளனர். ஒரு சிலர் மிகவும் முதுமையடைந்த கலைஞர்களாக இருக்கின்றனர். இவர்கள் நாட்டுக்குக் கொடுத்துதவிய விலைமதிப்பற்ற சொத்துக்களைப் பாதுகாத்து எதிர்கால சந்ததியினரின் பயன்பாட்டுக்காகப் பேணிப் பாதுகாக்கும் மகத்தான வேலைத்திட்டத்திற்கு கலாசார அலுவல்கள் திணைக்களம் முன்னுரிமையளித்துச் செயலாற்றுகின்றது.

முக்கியத்துவம்

இலங்கை பெருமைமிக்க வரலாற்றை உரித்தாக்கிக்கொண்ட நாடாகும். இப்பெருமையை உலகோருக்கு எடுத்துக்காட்டக்கூடிய பிரதான ஊடகமாக ஓவியங்களைப் பயன்படுத்த முடியும். ஒரு தேசத்தின் வரலாறு, கலை, கலாசாரம் போன்ற அனைத்து அம்சங்களையும் வெளியிடுகின்ற பிரபலமான கலை ஊடகமாக ஓவியங்களைக் குறிப்பிட முடியும். ஒரு நாட்டின் அடையாளத்தை எடுத்துக்காட்டுகின்ற பொருட்களிடையே அந்நாட்டில் அமைந்துள்ள தேசிய கலாபவத்திற்குச் சிறப்பான ஓர் இடம் உரித்தாகின்றது.

எமது வரலாறு முழுவதிலும் சந்திக்கின்ற பல்வேறு திருப்புமுனைகள் ஓவியக்கலையின் மூலம் காட்டப்பட்டிருப்பதனால் அவற்றைப் பேணிப் பாதுகாக்க வேண்டியது இன்றுள்ள தேவையாக மாறியிருக்கின்றது.

தற்பொழுது இலங்கையில் தலைசிறந்தவர்களாக அடையாளம் காணப்பட்ட சுமார் 40 கலைஞர்களின் படைப்புகள் தற்பொழுது தேசிய கலாபவனத்தில் வைக்கப்பட்டுள்ளன. அவர்களின் படைப்புகளில் சுமார் 200 படைப்புகள் பேணிப்பாதுகாக்க வேண்டிய நிலையில் இருக்கின்றன. ஓர் ஓவியத்தைப் பேணிப் பாதுகாக்கப் பெருந்தொகையான பணம் செலவாகின்ற அதே நேரத்தில் இவ்வோவியங்களைப் பேணிப்பாதுகாப்பது சம்பந்தமான அடிப்படைப் பணிகள் செயற்படுத்தப்படுகின்றன.

தேசிய கலாபவனத்தின் விபரங்களைப் பேணிப்பாதுகாத்தல்
தேசிய கலாபவனத்தின் விபரங்களைப் பேணிப்பாதுகாத்தல் தேசிய கலாபவனத்தின் விபரங்களைப் பேணிப்பாதுகாத்தல்
Last Updated ( Tuesday, 17 December 2013 07:20 )