Sinhala (Sri Lanka)English (United Kingdom)

நிகழ்ச்சி நாள்காட்டி

நொவெம்பர் 2017
ஞா தி செ பு வி வெ
29 30 31 1 2 3 4
5 6 7 8 9 10 11
12 13 14 15 16 17 18
19 20 21 22 23 24 25
26 27 28 29 30 1 2
நீங்கள் இங்கே உள்ளீர்கள் : நிறுவனங்கள் சிங்கள கலைக்களஞ்சிய அலுவலகம்

சிங்கள கலைக்களஞ்சிய அலுவலகம்

ஆரம்பமும் திட்டமும்

உலக அறிவை சுய பாiஷயில் வழங்க வேண்டியது அவசியம் என்பதனால் பல அந்திய மொழிகளில் இருக்கின்ற விதத்தில் கலைக்களஞ்சியமொன்று உருவாக்க வேண்டியதன் அவசியத்தை ஏற்றுக்கொண்ட இலங்கை அரசு 2500 புத்த ஜயந்தி வருடத்தின் நிமித்தம் ஆரம்பிக்கப்பட்ட ஒரு கருத்திட்டமாகச் சிங்கள கலைக்களஞ்சியக் கருத்திட்டத்தின் பயன்பாடு 1955ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது.

அதன் ஆரம்பகாலப் பிரதம ஆசிரியராக இருந்தவர் இலங்கைப் பல்கலைக் கழகத்தின் சிங்களப் பேராசிரியரான காலஞ்சென்ற டீ.ஆர். ஹெட்டி ஆராச்சி. 2005ஆம் ஆண்டில் இக்கருத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டு ஐம்பது வருடங்களாகின்றது.

அதன் ஆரம்பவிழாக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள வகையில் பௌதிகவியல், இரசாயனவியல், விலங்கியல், தாவரவியல், அரசியல், புவியியல், சமூகவியல், தொல்பொருளியல், மேலைத்தேய இலக்கியம், ஆயுர்வேதம், கீழைத்தேய மேலைத்தேய வரலாறு,வாழ்க்கைச் சரிதம், நுண்கலை, சட்டம், வாணிபம் போன்ற மிகப்பெரிய பரப்பெல்லை முழுவதிலும் விரிவடைந்து செல்கின்ற விதத்தில் இப்பணிகளை நிறைவேற்றுவதற்குத் திட்டமிடப்பட்டது.

ஆரம்பத்தில் 750 பக்கங்களைக்கொண்ட 15 தொகுதிகளாக இப்பணி பூர்த்தி செய்யப்பட்டது. அன்று இவ்வாக்கத்திற்கு ஆங்கிலத்தில் வெளியிடப்பட்ட என்சைக்ளோபீடியா பிரிட்டானிகா என்ற கலைக்களஞ்சியம் முன்மாதிரியாக இருந்தது.

1955இல் அவ்வாறு எதிர்பார்க்கப்பட்டாலும் காலப்போக்கில் சம்பந்தப்பட்ட விடயத்துறைக்கு மேலதிகமாகப் புதிய விடயத் துறைகளும் இன்று அறிவில் சேர்ந்ததன் காரணமாக 15 பாகங்களைக் கடந்து செல்ல வேண்டும் என்பது தெளிவாகத் தெரிந்தது. இப்பொழுது 20 பாகங்களுடன் பூர்த்தி செய்வதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள தொகுதிகள்

Volume
Printed Year Headline Chief Editor
1 1963
அ - ஐசொப்றின் பேராசிரியர். டீ.ஈ.ஹெட்டிஆராச்சி
2 1965
ஐசோரியா - உணவு மேற்படி
3 1967
உணவுப் பாதுகாப்பு சிந்துவெளி நாகரிகம் மேற்படி
4 1970
இந்தோனேசியா - தோள்கள் மேற்படி
5 1974
உறிஞ்சி-மூலிகைத்தாவரங்கள் மேற்படி
6 1978
க-தொழில்நுட்பம் மேற்படி
7 பகுதிகளாக 1988 - 1991
கைத்தொழிற்புரட்சி - கெவல்ய கலாநிதி. ஹரிச்சந்திரவிஜயதுங்க
8 1994
கொங்கொடெட் - கமேர் குடியேற்றத்திட்டம் பேராசிரியர். கே.என்.ஓ. தர்மதாச
9 1998
க-விமானசேவை பேராசிரியர். கே.என்.ஓ.தர்மதாச
10 2001
விமானப்படை - கோசிதாராமய பேராசிரியர். மென்டிஸ் ரோஹணதீர
11 2006
ச்ச - ஜ எழுத்துக்கள் பேராசிரியர். கே.என்.ஓ. தர்மதாச
12 2010 பேராசிரியர். கே.என்.ஓ. தர்மதாச
13 2016 பேராசிரியர். கே.என்.ஓ. தர்மதாச

கலைக்களஞ்சிய பணியாட்டொகுதியினர்

பிரதம ஆசிரியர்

பேராசிரியர் Kulathilaka Kumarasingha
ஆசிரியர்கள்
தேவிகா பிரியதர்ஷனி எதிரிவீர
பிரதம ஆசிரியர்கள்


கே.இந்திரா பெரேரா
உதவி ஆசிரியர்கள்

ஜகதி சமிலா இலேபெரும

ரஞ்சன தேவமித்ர சேனாசிங்க

சமரி பிறியங்கா எதிரிசிங்க
Last Updated ( Tuesday, 01 November 2016 05:09 )