Sinhala (Sri Lanka)English (United Kingdom)

 

நிகழ்ச்சி நாள்காட்டி

மே 2017
ஞா தி செ பு வி வெ
30 1 2 3 4 5 6
7 8 9 10 11 12 13
14 15 16 17 18 19 20
21 22 23 24 25 26 27
28 29 30 31 1 2 3
நீங்கள் இங்கே உள்ளீர்கள் : கலைப் பேரவை தேசிய சித்திர மற்றும் சிற்பத் துணைப் பேரவை

தேசிய சித்திர மற்றும் சிற்பத் துணைப் பேரவை

1952ஆம் ஆண்டின் 18ஆம் இலக்கப் பாராளுமன்றச் சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட இலங்கைக் கலைப் பேரவையின் துணைப் பேரவையாக 1982ஆம் ஆண்டு தேசிய சித்திரங்கள், சிற்பங்கள் துணைப்பேரவை ஸ்தாபிக்கப்பட்டது. இத்துணைப் பேரவை கட்புலக் கலையின் பொருட்டுத் தோற்றுகிற இராஜதந்திர நிறுவனங்களுக்கிடையே முக்கிய இடம் வகிக்கிறது.

தேசிய சித்திரங்கள் மற்றும் சிற்பங்கள் துணைப்பேரவை கட்புலக் கலையின் அபிவிருத்தி, மேம்பாடு, விரிவாக்கம் போன்ற நோக்கங்களுக்காக அமைக்கப்பட்டுள்ளது.

மேற்குறிப்பிட்ட நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்வதன் மூலம் மக்களுடைய இரசனைக்காகத் தேசிய சித்திரங்கள், சிற்பங்கள் துணைப்பேரவையைச் செயற்படுத்துவது இரண்டு விதமாக இனங்காணப்பட்டுள்ளது.

  • கட்புலக் கலையின் ஊடாக நேரடி நடவடிக்கை.
  • கட்புலக் கலையின் அபிவிருத்தியின் பொருட்டுத் தலையிடல்.

கட்புலக் கலையின் ஊடாக நேரடி நடவடிக்கைகள்.

  • சித்திரங்கள் சிற்பக்கலைகளை அடிப்படையாகக் கொண்ட பிரதேச கருத்திட்டங்கள்.
  • சித்திரங்கள் சிற்பக்கலைகளை அடிப்படையாகக் கொண்ட தேசிய கருத்திட்டங்கள்.
  • சித்திரங்கள் சிற்பக்கலைகளை அடிப்படையாகக் கொண்ட சர்வதேச கருத்திட்டங்கள்.

மேலே இலக்கமிடப்பட்டுள்ள மூன்று தொகுதிகளின் கீழ் கண்காட்சிகள், செயலமர்வுகள், மகாநாடுகள், வெளியீடுகள் போன்ற செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

கட்புலக் கலையின் அபிவிருத்திக்கான தலையீடு

  • தேசிய கலாபவனத்தை அபிவிருத்தி செய்தல்.
  • கலைஞர்களின் நலனோம்பலை ஏற்படுத்தல்.
  • சித்திரங்கள் சிற்பங்கள் தொடர்பான அரும்பொருட்காட்சிச்சாலையொன்றை ஆரம்பித்தல்.

தேசிய சித்திரங்கள் மற்றும் சிற்பங்கள் துணைப் பேரவையின் வருடாந்த நிகழ்ச்சித்திட்டங்கள்.

  • அரச சித்திரங்கள் மற்றும் சிற்பங்கள் விழா.
  • அரச சிறுவர் சித்திர விழா.
  • எமது ஓவியர்களின் தேசிய ஓவியக் கண்காட்சி.
  • வருடாந்த சித்திர ஆசியர்கள் சிறுவர்கள் செயலமர்வு.
  • கட்புலக் கலையின் இருவருட ஓவியக் கண்காட்சி.
  • தேசிய கலாபவனத்தின் சித்திரங்களைப் பாதுகாக்கும் கருத்திட்டம்.
Last Updated ( Friday, 04 March 2016 07:46 )