Sinhala (Sri Lanka)English (United Kingdom)

 

நிகழ்ச்சி நாள்காட்டி

மே 2017
ஞா தி செ பு வி வெ
30 1 2 3 4 5 6
7 8 9 10 11 12 13
14 15 16 17 18 19 20
21 22 23 24 25 26 27
28 29 30 31 1 2 3
நீங்கள் இங்கே உள்ளீர்கள் : கலைப் பேரவை தேசிய இலக்கியத் துணைப்பேரைவை

தேசிய இலக்கியத் துணைப்பேரைவை

1952ஆம் ஆண்டின் 18ஆம் இலக்க இலங்கை கலைப்பேரவைச் சட்டத்தின் மூலம் ஸ்தாபிக்கப்பட்ட தேசிய இலக்கியத் துணைப்பேரவை இன்றுவரை செயலூக்கத்துடன் இயங்குகின்றது.

தேசிய இலக்கிய துணைப்பேரவையை அமைத்ததன் குறிக்கோள்

இதன் முக்கிய கடமை சிங்கள, தமிழ், ஆங்கில மொழிகளிலேயே இந்நாட்டு இலக்கியத் துறையின் முன்னேற்றத்தின் பொருட்டு செயலாற்றுதல், பேணிப் பாதுகாத்தலாகும். இந்நோக்கத்தின்கீழ் வருடாந்தம் பல நிகழ்ச்சித் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.

  • அரச இலக்கிய விருது வழங்கும் விழாவை நடத்துதல்.
  • நாட்டின் பல்வேறு மாகாணங்களில் இலக்கிய விரிவுரைகளை நடத்துவதன் மூலம் இலக்கிய இரசனையைப் பாடசாலைப் பிள்ளைகளுக்கும் பொது மக்களுக்கும் பெற்றுக்கொடுத்தல்.
  • இலக்கிய செயலமர்வுகள் மூலம் சிறுகதை, நாவல், பாடல்கள், செய்யுள்கள் தொடர்பாக மக்களின் இரசனையை வளர்த்தலை நோக்கமாகக் கொண்டு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இச்செயலமர்வு நடத்தப்படுகிறது.
  • இலக்கிய சஞ்சிகையைப் பேணிப் பாதுகாத்து அச்சிடல், இச்சஞ்சிகை மூன்று மாதங்களுக்கொருமுறை கல்விமான்களின் கட்டுரைகளை உள்ளடக்கி அச்சிடப்படுகின்ற அதே நேரத்தில் இலக்கிய விழாவுக்கு சமபோக்காக விசேட இலக்கிய சஞ்சிகையொன்றும் வெளியிடப்படுகின்றது.

தேசிய இலக்கியத் துணைப் பேரவையின் கட்டமைப்பு

  • சிங்கள இலக்கியத் துணைப்பேரவை
  • தமிழ் இலக்கியத் துணைப்பேரவை
  • ஆங்கில இலக்கியத் துணைப்பேரவை

1957 முதல் 3 துணைப் பேரவைகளாக நடத்தப்பட்ட தேசிய இலக்கியத் துணைப் பேரவை 2004 முதல் ஒரு துணைப்பேரவையாக இயங்குகிறது.

Last Updated ( Saturday, 17 September 2016 11:03 )