Sinhala (Sri Lanka)English (United Kingdom)

நிகழ்ச்சி நாள்காட்டி

ஒக்டோபர் 2017
ஞா தி செ பு வி வெ
1 2 3 4 5 6 7
8 9 10 11 12 13 14
15 16 17 18 19 20 21
22 23 24 25 26 27 28
29 30 31 1 2 3 4
நீங்கள் இங்கே உள்ளீர்கள் : கலைப் பேரவை நர்த்தன அபிநய நாடகம் மற்றும் நூலாட்டக் காட்சி துணைப்பேரவை

நர்த்தன அபிநய நாடகம் மற்றும் நூலாட்டக் காட்சி துணைப்பேரவை

'பனஸ் ஹயே பெரலிய' (ஐம்பத்தாறாம் ஆண்டு புரட்சி) எனக் குறிப்பிடப்படுகின்ற 1956ஆம் ஆண்டில் நிகழ்ந்த அரசியல், பொருளாதார, சமூக எழுச்சியுடன் இலங்கையின் கலாசாரத் துறையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்த, காலனித்துவத்தினால் அழிந்துபோன தேசியத்துவத்தை மீளக் கட்டியெழுப்ப கலாசார அலுவல்கள் திணைக்களம் ஸ்தாபிக்கப்பட்டது.

அதன்கீழ் நர்த்தனக்கலை விடயத்துறை கிராமிய கலாநிலையத்திலிருந்து பல்கலைக்கழகம் வரை வளர்ச்சியடைவதைக் காணக்கூடியதாக இருக்கின்றது. கலாசார அலுவல்கள் திணைக்களத்தோடு இணைந்த நடனக் கலைஞர்கள் குழுவொன்று உருவாக்கப்பட்டுள்ளது. இதன்பொருட்டு தலைசிறந்த இசைக்கலைஞர்களான டப்ளியு.பீ. மகுலொழுவ, கெப்டன் தெல்வல, கலாநிதி பணிபாரத ஆகிய கல்விமான்கள் முன்னணி வகித்து செயலாற்றினர்.

இன்றுள்ள துணைப்பேரவை மூன்று பிரதான பிரிவுகளைக் கொண்டுள்ளது.

  • நர்த்தனக் கலை விடயத்துறை.
  • அபிநய நாடகக் கலை.
  • நூலாட்ட காட்சிக் கலை.

இப்பிரிவுகளைத் தழுவி வருடாந்தம் பல நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

  • தேசிய நடன விழாவை நடத்துதல்.
  • உலக நர்த்தன தினத்தைக் கொண்டாடுதல்.
  • தேசிய அபிநய நாடக விழாவை நடத்துதல்.
  • உலக நூலாட்ட தினத்தைக் கொண்டாடுதல்.
  • தேசிய மேள (பெர) இசை விழாவை நடத்துதல்.
  • நாட்டார் நாடகம், கிராமிய நாடகம், முகமூடிக்கலை தொடர்பாகக் கற்றறிதல், கருத்தரங்குகள், செயலமர்வுகள் என்பவற்றை நடத்துதல்.
  • சொக்கரி, கோலம் போன்ற நாட்டார் நாடகங்களை மீள நடத்தும் நிகழ்ச்சித்திட்டங்கள்.
  • தலைசிறந்த நடன, நூலாட்ட, முத்திரை நாடக ஆசிரியர்களின் சேவையை மதிப்பீடு செய்தல், விருது வழங்கல்.
  • தோட்டப்பகுதிக் கலாசாரத்தோடு பின்னிப்பிணைந்த நடனம், நாட்டுக்கூத்து தொடர்பான செயலமர்வுகளை நடத்துதல்.
Last Updated ( Friday, 04 March 2016 07:47 )