Sinhala (Sri Lanka)English (United Kingdom)

நிகழ்ச்சி நாள்காட்டி

ஜூலை 2017
ஞா தி செ பு வி வெ
25 26 27 28 29 30 1
2 3 4 5 6 7 8
9 10 11 12 13 14 15
16 17 18 19 20 21 22
23 24 25 26 27 28 29
30 31 1 2 3 4 5
நீங்கள் இங்கே உள்ளீர்கள் : கலைப் பேரவை தேசிய நாடகத் துணைப்பேரவை

தேசிய நாடகத் துணைப்பேரவை

1952ஆம் ஆண்டின் 18ஆம் இலக்கப் பாராளுமன்றச் சட்டத்தின்மூலம் ஸ்தாபிக்கப்பட்ட இலங்கைக் கலைப்பேரவைச் சட்டத்தின் மூலம் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள வகையில் ஆலோசனைச் சேவைகளை வழங்குகின்ற பேரவையாக நாடகத் துணைப்பேரவை அமைக்கப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் இது சிங்கள நாடகத் துணைப்பேரவையாகப் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது.

தேசிய நாடகத் துணைப்பேரவை வருடாந்தம் உள்ளூர் நாடகக் கலையை மேம்படுத்துவதற்காக நியதிச்சட்ட சட்டத்தின்மூலம் செயற்படுத்தப்படுகிறது.

வருடாந்தம் ஒழுங்கு செய்யப்படுகின்ற பிரதான கருத்திட்டங்களாகும். வருட ஆரம்பத்தில் பத்திரிகைகளில் அறிவித்தல்களை வெளியிட்டதன் பின்னர் பெற்றுக்கொள்கின்ற விண்ணப்பங்களின் பிரகாரம் பல நாடக விழாக்கள் ஒழுங்கு செய்யப்படுகின்றன. முதற்சுற்று, இரண்டாவது சுற்று, மூன்றாவது சுற்று என்ற வகையில் நடத்தப்படுகின்ற நாடக விழாவைத் தலைசிறந்த நடுவர்கள் மதிப்பீடு செய்ததன் பின்னர் தெரிவுசெய்யப்படுகின்ற கலைஞர்கள் விருது வழங்கிக் கௌரவிக்கப்படுவார்கள்.

வருடாந்தம் ஒழுங்கு செய்யப்படுகின்ற இவ்விழாக்களுக்கு மேலதிகமாக நாடகத்துறையின் மறுமலர்ச்சிக்காகத் தெரிவுசெய்யப்படுகின்ற பிரதேசங்களில் இது தொடர்பாக அக்கறை காட்டுகின்றவர்களுக்கு நாடகத்துறையில் தலைசிறந்த கலைஞர்களைக் கொண்டு செயலமர்வுகளை நடத்துவதன் மூலம் செயல்முறை அறிவைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

வருடாந்தம் தெரிவுசெய்யப்படுகின்ற நாடகக் கலைஞர்களுக்கு வெளிநாடுகளில் நடத்தப்படுகின்ற நாடக விழாக்களில் கலந்துகொள்ளக் கலாசார திணைக்களத்தின் அனுசரணையைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

நாடக விழாவுக்கு விண்ணப்பிக்கின்றவர் நாடகத் துணைப்பேரவை வழங்குகின்ற யாப்பையும் விண்ணப்பப்படிவத்தையும் பெற்றுக்கொள்ள வேண்டும். அத்துடன், யாப்பில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களுக்கு ஏற்றவகையில் பங்காற்றக் கட்டுப்பட்டுள்ளார்.

Last Updated ( Friday, 04 March 2016 07:49 )