Sinhala (Sri Lanka)English (United Kingdom)

நிகழ்ச்சி நாள்காட்டி

நொவெம்பர் 2017
ஞா தி செ பு வி வெ
29 30 31 1 2 3 4
5 6 7 8 9 10 11
12 13 14 15 16 17 18
19 20 21 22 23 24 25
26 27 28 29 30 1 2
நீங்கள் இங்கே உள்ளீர்கள் : எம்மைப் பற்றி நோக்கு, செயல், நோக்கம்

நோக்கு, செயல், நோக்கம்

நோக்கு

இலங்கை மக்களை ஆன்மீக ரீதியாக அபிவிருத்தியடைந்த கூருணர்வுமிக்க மனிதர்களாக மாற்றுவது என்ற ஒரே எதிர்பார்ப்பை நிறைவேற்றிக்கொள்ளும் பொருட்டு, இலங்கைக்கேயுரிய கலாசாரத்தைக் கட்டியெழுப்புவதாகும்.

செயல்

இலங்கை அடையாளத்துடனான இலக்கியக் கலையையும் கலாசார அலுவல்களையும் பேணல்மேம்படுத்தல் விரிவாக்கல் என்பவற்றிற்கான நிகழ்ச்சித் திட்டங்களைத் தயாரித்தலும் செயற்படுத்தலும்.

நோக்கம்

  • இலங்கையின் கலாசார அலுவல்களை வினைத்திறன்மிக்க வகையிலும் பயனுறுதிமிக்க வகையிலும் நடைமுறைப்படுத்துவதற்காகத் திட்டங்களைத் தயாரித்தல் மற்றும் அவற்றை அமுலாக்கல்.
  • இலங்கையின் இலக்கியத்தையும் கலையையும் பேணல், மேம்படுத்தல், பிரசாரம் செய்தல் என்பவற்றோடு சம்பந்தப்பட்ட கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துதல்.
  • இலங்கை எழுத்தாளர்களையும் கலைஞர்களையும் கலாசாரத்தின் அங்கத்தினர்களாகக் கருதி, அவர்களுக்கு உதவிகளை வழங்குதல் மற்றும் படைப்புகளுக்குத் தேவையான உதவிகளை வழங்குதல்.
  • இலங்கையின் மொழி இலக்கியத்தையும் வரலாற்றையும் கலாசாரத்தின் அடிப்படையாகக் கருதி கலைக்களஞ்சியம், அகராதிகள், மகாவம்சம் என்பவற்றைத் தயாரிப்பதற்கும் எழுத்தாளர்களை ஊக்குவிப்பதற்குமான நூல்களைத் தயாரித்தல், நூல்களைக் கொள்வனவு செய்தல், கையேடுகளுக்கான போட்டிகளை நடத்துதல், அரிதாக இருக்கும் நூல்களை மீண்டும் அச்சிடுவதற்கான நிகழ்ச்சித் திட்டங்களைத் தயாரித்தல், மற்றும் அவற்றைச் செயற்படுத்துதல்.
  • இலங்கையைப் பல் கலாசார நாடாகக் கருதி அனைத்து உப கலாசாரங்களுக்கும் நியாயமான முறையில் அவர்களின் கலைகளையும் நுண்கலைகளையும் பேணல், மேம்படுத்தல், பிரசாரம் செய்தல் என்பவற்றிற்காக நிகழ்ச்சித்திட்டங்களைச் செயற்படுத்துதல்.
  • இலங்கையின் கட்புல மற்றும் கண்ணுக்குத் தெரியாத கலாசார அம்சங்களுக்குப் புத்துயிரளித்து, அவை சமூகத்தின் அனைத்து பிரிவுகளிலும் ஊடுருவிச் செல்லக்கூடிய நிகழ்ச்சித் திட்டங்களைத் தயாரித்தல் மற்றும் செயற்படுத்துதல் என்பவற்றின் மூலம் நன்னெறிகள் நிறைந்த சமுதாயம் ஒன்றை உருவாக்குதல்.
Last Updated ( Wednesday, 22 November 2017 04:51 )