Sinhala (Sri Lanka)English (United Kingdom)

 

நிகழ்ச்சி நாள்காட்டி

மே 2017
ஞா தி செ பு வி வெ
30 1 2 3 4 5 6
7 8 9 10 11 12 13
14 15 16 17 18 19 20
21 22 23 24 25 26 27
28 29 30 31 1 2 3
நீங்கள் இங்கே உள்ளீர்கள் : எம்மைப் பற்றி திணைக்களம்

கலாசார அலுவல்கள் திணைக்களம்

1956ஆம் ஆண்டு பதவிக்கு வந்த ஸ்ரீமான் எஸ்.டப்ளியு.ஆர்.டீ. பண்டார நாயக்கவின் மக்கள் அரசாங்கத்தின் கீழ் 1956ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 26ஆம் திகதியிட்ட 10975ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் மூலம் கலாசார அலுவல்கள் திணைக்களம் அமைக்கப்பட்டது.

இலங்கை அடையாளத்துடனான இலக்கியக் கலைகளையும், கலாசார அலுவல்களையும் பேணல், மேம்படுத்தல் மற்றும் விரிவாக்குதல் என்பவற்றிற்காக நிகழ்ச்சித் திட்டங்களைத் தயாரித்தல், செயற்படுத்துதல் என்பவற்றின் மூலம் கலாசாரத் துறையின் மேம்பாட்டுக்காக இத்திணைக்களம் பாரியளவில் சேவையாற்றுகின்றது.

இலங்கை கலைப் பேரவையின் கீழ் அமைக்கப்பட்டுள்ள தேசிய நாடகத் துணைப்பேரவை, இலக்கியத் துணைப்பேரவை, நாட்டிய மற்றும் நூலாட்டக் காட்சித் துணைப்பேரவை, இசைத் துணைப்பேரவை, ஓவியம் மற்றும் சிற்பக்கலைத் துணைப்பேரவை, என்பவற்றுடன் இணைந்து கலாசார அலுவல்கள் திணைக்களம் இம் மாபெரும் பணிக்கு உதவி வழங்குகின்றது. அதன்மூலம் இயல்பாகவே பல்வேறு கலாசார ஆற்றல்களைக் கொண்ட படைப்பாளிகளை இனங்கண்டு அத்திறைமைகளை வளர்ப்பதும் மதிப்பதும் இத்திணைக்களத்தின் பணிகளில் தனித்துவமானவையாகும்.

திணைக்களத்தின் கீழ் நிர்வகிக்கப்படுகின்ற சிங்கள அகராதிகள் அலுவலகம், சிங்களக் கலைக்களஞ்சிய அலுவலகம், தேசிய கலாபவனம், ஜோன் த சில்வா ஞாபகார்த்த அரங்கு, மகாவம்சத் தயாரிப்பு அலுவலகம் போன்ற நிறுவனங்களும், தேசிய சுதந்திர மாளிகை போன்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மாபெரும் நினைவுச் சின்னமும் கலாசார எழுச்சியை ஏற்படுத்துவதற்காக திணைக்களப் பணிகளுக்குத் தோள்கொடுத்து செயலாற்றுகின்றன.

நிர்வாகம், கணக்குகள், கலை, இலக்கியம், வெளியீடு என 04 பிரிவுகளின் கீழ் திணைக்களப் பணிகள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.

திணைக்களத்தின் பணிகளை மாவட்ட மற்றும் பிரதேச அடிப்படையில் நிறைவேற்றுவதற்கும் உரிய இணைப்புப் பணிகளை மேற்கொள்வதற்கும் மாவட்ட செயலகத்துக்கும் பிரதேச செயலகத்துக்கும் ஒரு கலாசார உத்தியோகத்தர் அல்லது ஒரு கலாசார அபிவிருத்தி உதவி அலுவலர் வீதம் இணைக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே மாவட்ட செயலகங்கள் சிலவற்றுக்கு கலாசார உதவிப் பணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ள அதே நேரத்தில் அவ்வுத்தியோகத்தர்களூடாகத் திணைக்களப் பணிகளைக் கிராமிய மக்கள் வரை விரிவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Last Updated ( Tuesday, 06 March 2012 06:16 )