Sinhala (Sri Lanka)English (United Kingdom)

 

நிகழ்ச்சி நாள்காட்டி

மே 2017
ஞா தி செ பு வி வெ
30 1 2 3 4 5 6
7 8 9 10 11 12 13
14 15 16 17 18 19 20
21 22 23 24 25 26 27
28 29 30 31 1 2 3
நீங்கள் இங்கே உள்ளீர்கள் : ஊடகம் செய்திகளும் சம்பவங்களும் அரச இலக்கிய விருது வழங்கல் - 2017 2016 ஆம் அண்டு வெளிவந்த நூல்களை விருதிற்காக பரிசீலித்தல்

அரச இலக்கிய விருது வழங்கல் - 2017 2016 ஆம் அண்டு வெளிவந்த நூல்களை விருதிற்காக பரிசீலித்தல்

உள்ளக அலுவல்கள் வடமேல் அபிவிருத்தி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சுää கலாசார அலுவல்கள் திணைக்களம் மற்றும் அரச இலக்கிய ஆலோசனைக் குழு ஒன்றிணைந்து ஏற்பாடு செய்கின்ற “அரச இலக்கிய விருது வழங்கல் விழா 2017” விற்காக கிடைக்கப்பெற்ற நூல்களின் பெயர் பட்டியல் தற்போது அனைத்து மாவட்டச் செயலகங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

2016 ஆம் ஆண்டு வெளிவந்த நூல்கள் அரச சுவடி திணைக்களத்தில் பதிவுசெய்யப்பட்ட மற்றும் எழுத்தாளர்கள் மூலம் நேரடியாக அரச இலக்கிய ஆலோசனைக்குழுவிற்கு ஒப்படைக்கப்பட்ட அல்லது தபால் மூலம் அனுப்பப்பட்ட நூல்களின் பெயர் பட்டியல் இத்துடன் உள்ளடக்கப்பட்டுள்ளது.

நூல்களின் பெயர் பட்டியலை 2017-05-12 ஆம் திகதி முதல் 2017-05-25 ஆம் திகதி வரை அனைத்து மாவட்டச் செயலகங்கள் மறறும் கலாசார அலுவல்கள் திணைக்களம் ஆகியவற்றில் அலுவலக நேரத்தில் பார்வையிடலாம்.

அதேபோல் www.culturaldept.gov.lk என்ற இணையத்தள முகவரியிலும் பெயர் பட்டியலை பார்வையிடலாம்.

மேற்படி பெயர் பட்டியிலில் அடங்காத 2016 ஆம் ஆண்டு முதலாவது பதிப்பாக வெளிவந்த நூல்களை விண்ணப்பப்படிவத்துடன் நூல்களில் 3 பிரதிகளுடன் 2017-05-25 ஆம் திகதிக்கு முன்னர் கலாசார அலுவல்கள் திணைக்களத்திடம் நேரடியாக கையளிக்கலாம்;ää அல்லது அரச இலக்கிய ஆலோசனைக் குழுää கலாசார அலுவல்கள் திணைக்களம்ää 8ம் மாடிää செத்சிறிபாயää பத்தரமுல்லை என்ற முகவரிக்கு பதிவுத் தபாலில் அனுப்புதல் வேண்டும்.

மேலதிக விபரங்கள்: 011-2872030 ஃ 011-2872031