Sinhala (Sri Lanka)English (United Kingdom)

நிகழ்ச்சி நாள்காட்டி

ஜூலை 2017
ஞா தி செ பு வி வெ
25 26 27 28 29 30 1
2 3 4 5 6 7 8
9 10 11 12 13 14 15
16 17 18 19 20 21 22
23 24 25 26 27 28 29
30 31 1 2 3 4 5
நீங்கள் இங்கே உள்ளீர்கள் : ஒதுக்குதல் சுதந்திர சதுக்கம் ஒதுக்கீட்டுக்காக

சுதந்திர சதுக்கம் ஒதுக்கீட்டுக்காக

மின்னஞ்சல் Print PDF

சுதந்திர சதுக்கம் ஒதுக்கீடு - நிபந்தனைகள்

சுதந்திர சதுக்கம் ஒதுக்கீட்டின் போது ஒதுக்கப்பட்டதன் பின்பு மற்றும் பாவனையின் போது கீழ்க் காணும் நிபந்தனைகளை நீங்கள் கடைப்பிடித்தல் வேண்டும்.

01.       திருமணப் புகைப்படம் எடுத்தல் தொடர்பாக பூரணப்படுத்திய விண்ணப்பப்படிவம், தேசிய அடையாள அட்டையின் பிரதி மற்றும் திருமண அழைப்பிதழ் என்பன சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.

02.       வேறு படப்பிடிப்புக்களுக்காக பூரணப்படுத்திய விண்ணப்பப்படிவம், தேசிய அடையாள அட்டையின் பிரதி என்பன சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.

03.       புகைப்படம் எடுக்கப்படும் தினத்திற்கு 14 நாட்களுக்கு முன்னர் விண்ணப்பிக்கப்படல் வேண்டும்.

04.       அனுமதி கடிதம் வழங்கப்படுவது மணமக்கள் இருவரில் ஒருவருக்கு அல்லது தாய்ää தந்தைக்கு மாத்திரமே ஆகும்.

05.       அனுமதிக் கடிதம் கிழமை நாட்களில் மு.ப. 9.00 மணி தொடக்கம் பி.ப. 12.00 மணி வரை மற்றும் பி.ப. 1.00 மணி முதல் பி.ப. 3.00 மணி வரை மாத்திரமே வழங்கப்படும்.

06.       ஒதுக்கீடு செய்வதற்கு பணம் செலுத்தப்படுதல் வேண்டும்.

07.       படப்பிடிப்புக்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நேரம் உங்கள் அனுமதிக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதுடன், அந்நேரம் பற்றி கவனத்தில் செலுத்தவும்.

08.       தேசிய பெறுமதிமிக்க இந்த இடத்தினை கலாசார விழுமியங்களுடன் உங்களுடைய கடமையை செய்வதற்கும், இடம் மற்றும் அதன் பாதுகாப்பு பற்றிய பொறுப்பு உங்களால் கூறப்படவேண்டும் என்பதுடன், ஏதேனும் பாதிப்பு ஏற்படுமாயின் அதன் நஷ்டத்தினையும் நீங்கள் செலுத்துதல் வேண்டும்.

09.       மேற்படி படப்பிடிப்புக்களுக்காக மின்சார பாவனையை சுதந்திர சதுக்கத்தில் பெற்றுக்கொள்ள தீர்மானித்தால் அதற்கான செலவினை நீங்கள் செலுத்துதல் வேண்டும்.

10.       மேற்குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளை கடைப்பிடித்தல் தொடர்பாக தங்களின் ஒத்துழைப்பு வரவேற்கப்படுகிறது.

 

அனுஷா கோகுல பெர்னாந்து

பணிப்பாளர்

கலாசார அலுவல்கள் திணைக்களம்

சுதந்திர சதுக்கம் ஒதுக்கீட்டுக்காக பணம் அறவிடுதல்

 

1.         சாதாரண திருமண புகைப்படம் எடுத்தல் மற்றும் படப்பிடிப்புக்களுக்காக முதல் 03 மணித்தியாலங்களுக்கு ரூ.1000.00 அறவிடப்படும்.

2.         வேறு விசேட படப்பிடிப்புக்களுக்காக, விளம்பரங்கள், குறுந் திரைப்படம், திரைப்படம், விவரண படப்பிடிப்பு மற்றும் இசை நிகழ்ச்சிகள் ஆகியவற்றிற்கு முதல் 03 மணித்தியாலங்களுக்கு ரூ. 5,000.00 பணம் அறிவிடப்படுவதுடன், அடுத்து ஒவ்வொரு மணித்தியாலத்திற்கும் ரூ. 1000.00 வீதம் அறவிடப்படும்.

3.         வெளிநாட்டு படப்பிடிப்புக்களுக்கு முதல் 03 மணித்தியாலங்களுக்கு ரூ. 10,000.00 அறவிடப்படும்.

 

(இவை தேவைக்கேற்ற சந்தரப்பங்களுக்கு ஏற்றவாறு வேறுபடும்.)

For further details – 011 2882592

Application for the reservation of Independence Hall

Last Updated ( Wednesday, 24 August 2016 04:31 )