Sinhala (Sri Lanka)English (United Kingdom)

நிகழ்ச்சி நாள்காட்டி

ஜூலை 2017
ஞா தி செ பு வி வெ
25 26 27 28 29 30 1
2 3 4 5 6 7 8
9 10 11 12 13 14 15
16 17 18 19 20 21 22
23 24 25 26 27 28 29
30 31 1 2 3 4 5
நீங்கள் இங்கே உள்ளீர்கள் : கருத்திட்டங்கள் ஜோன் த சில்வா ஞாபகார்த்த மண்டபம்

ஜோன் த சில்வா ஞாபகார்த்த மண்டபம் நிர்மானிப்பு

மின்னஞ்சல் Print PDF

2012 ஆம் ஆண்டு வரவுசெலவு திட்ட கலந்துரையாடலின் பின் தீர்மானிக்கப்பட்டதன் படி கலைஞர்களுக்கு தேவைக்கு ஜோன் த சில்வா ஞாபகார்த்த மண்டபத்தினை நவீனப்படுத்தல் நடிவடிக்கைக்காக கலாசார அலுவல்கள் இராஜாங்க அமைச்சு மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களம் ஆகியவற்றினால் திறைச்சேரினால் பெருமளவு நிதி பெற்றுக்கொள்ளப்பட்டது.

ஜோன் த சில்வா ஞாபகார்த்த மண்டபத்தின் மேடை மிகவும் பழுதடைந்து காணப்பட்டதுடன், அரங்க பகுதி, ஒலிப்பரப்பு பகுதி மற்றும் ரசிகர்கள் ஆசனங்கள் என்பன மிகவும் மோசமான முறையில் காணப்பட்டது. இந்த மண்டபம் குளிரூட்டப்படாததால் மாழைக்காலங்களில் மற்றும் அதி வெப்பக் காலங்களிலும் நாடகங்கள் பார்வையிடுவது கஷ்டமாக இருந்தது.

இந்த நிலமையை கருத்திற்கொண்டு நாடகக் கலைஞர்கள் மற்றும் பார்வையாளர்களின் வேண்டுக்கோளிற்கமைய எதிர்காலத்திற்கு ஏற்றவாறு நவீனமயப்படுத்தி புதிய தொழில்நுட்ப வசதிகளுடன் ஜோன் த சில்வா ஞாபகார்த்த மண்டபத்தினை விரைவாக நவீனப்படுத்துவதற்கும், நவீனப்படுத்தலின் பின் சலுகை விலையில் கலைஞர்களுக்கு ஜோன் த சில்வா ஞாபகார்த்த மண்டபத்தினை வழங்குவதற்கு கலாசார அலுவல்கள் திணைக்களம் முடிவெடுத்துள்ளது.

நான்கு மாடி கட்டிடமாக கொண்ட ஜோன் த சில்வா ஞாபகார்த்த மண்டபம் மீண்டும் நிர்மான வேலைகள் 2014 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 10 திகதி ஆரம்பிக்கப்பட்டதுடன் அதன்படி ஜோன் த சில்வா ஞாபகார்த்த மண்டபம் புதிய தொழில்நுட்பம் மற்றும் வசதிகளுடன் கூடிய நவீனப்படுத்துவதற்குää புதிய அலுவலக கட்டிடம், புதிய உணவுச்சாலை மற்றும் வாகனத் தரிப்பிடம் என்பன உள்ளடக்கப்பட்டுள்ளது.

அதன்படி நிர்மானிக்கப்படும் ஜோன் த சில்வா ஞாபகார்த்த மண்டபம் 800 ஆசனங்களுடன்ää பெல்கனி 200 ஆசனங்களை கொண்டதாகும். இத்துடன் 650 சதுர அடி கொண்ட ஒன்றுகூடல் மண்டபம் இரண்டும், 2800 சதுர அடி கொண்ட பயிற்சி மண்டபம், உடை மாற்றும் இரண்டு அறைகள், கலைஞர்கள் ஓய்வு அறைகள், புதிய சிற்றுண்டிச்சாலை,  அலுவலக வசதிகள்,  புதிய தொழில்நுட்ப ஒலி, ஒளி வசதிகளுடன் அமையப்பெறுகிறது.

Last Updated ( Tuesday, 07 July 2015 08:48 )